இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமத்தின் தலைமை நிர்வாக பதவி யாருக்கு என்பதில் பெரும் போட்டியும், எதிர்ப்பும் உருவாகியிருக்கும் வேளையில் நோயல் டாடா-வின் கனவுக்கு மறைந்த ரத்தன் டாடாவின் இளைய சகோதரரும், 85 வயதானவருமான ஜிம்மி டாடா வேட்டு வைத்துள்ளார்.
டாடா டிரஸ்ட் அமைப்பின் தலைவரான நோயல் டாடா, டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ்-ன் தலைமை பொறுப்பை என்.சந்திரசேகரனுக்கு அளிப்பதில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில், டாடா டிர்ஸ்ட் சார்பில் ரத்தன் டாடா சகோதரர் ஜிம்மி டாடா திடீரென சந்திரசேகரனுக்கு ஆதரவு கொடுத்த டாடா டிரஸ்ட் அமைப்பில் புதிய அதிர்வலையை உருவாக்கியுள்ளார்.

யார் இந்த ஜிம்மி டாடா..?
ஜிம்மி டாடா, ரத்தன் டாடா இருக்கும் போதும் சரி, அவர் மறைந்த பின்பும் சரி டாடா குழும நிர்வாக முடிவிலும், டாடா டிரஸ்ட் முடிவுகளிலும் கலந்துகொண்டது கிடையாது. வர்த்தகத்தில் ஆர்வம் இல்லாத அவர் ஆரம்பம் முதல் புனேவில் ஒரு அமைதியான, கார்ப்ரேட் நிர்வாக வாசனையில் இருந்து தள்ளியே இருந்தார்.
ஆயினும் ஜிம்மி டாடா 1989 முதல் டாடா சன்ஸ் நிறுவனத்தில் பெரும் பங்கு வைத்திருக்கும் சர் ரத்தன் டாடா டிரஸ்ட்-ன் டிரஸ்ட்சியாற இருந்து வருகிறார், மேலும் இந்த டிரஸ்ட்டின் 3 நிரந்தர டிரஸ்டிகளில் ஒருவராகவும் இருந்து வருகிறார்.
இதோடு டாடா குழுமத்தின் Bai Hirabai Jamsetji Tata Navsari Charitable Institution மற்றும் Sarvajanik Seva Trust ஆகிய இரு அமைப்புகளின் டிரஸ்டியாகவும் இருந்து வரும் அமைதியான நபர்.
மௌனத்தை களைத்த ஜிம்மி டாடா
இந்த நிலையில் டாடா குழுமத்தில் ஏற்பட்டு உள்ள நிர்வாக போராட்டத்தைச் சரி செய்யும் வண்ணம் தற்போது ஜிம்மி டாடா, டாடா சன்ஸ் தலைவராக என்.சந்திரசேகரனுக்கு 3வது முறையாகப் பதவி நீட்டிப்பு வழங்கும் முடிவிற்கு ஆதரவு தெரிவித்து அதிரடி டிவிஸ்ட் கொடுத்துள்ளார்.
மேலும் டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ்-ஐ ஆர்பிஐ-யின் விதிமுறைக்கு இணங்க, NBFC விதிமுறைகளுக்கு ஏற்ப பட்டியலிடும் முடிவுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார். ஜிம்மி டாடா தனது முடிவையும், கருத்தையும் சக டாடா டிரஸ்ட் அமைப்பின் டிரஸ்டி உடன் பகிர்ந்துள்ளார். இந்த கலந்துரையாடலில் பதிவு செய்யப்பட்ட ஜிம்மியின் கருத்துக்களையும், பார்வையையும் எழுத்துப்பூர்வமாக சக டாடா டிரஸ்டிகளுக்கு சமர்ப்பித்துள்ளார்.
ஏற்கனவே நோயல் டாடா, டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பட்டியலிடாமல் இருப்பதற்கான வழிகளை அடங்கிய அறிக்கையை டாடா சன்ஸ் நிறுவனத்திடம் கொடுத்துள்ளார். இதற்கான பதவியை அடுத்த நிர்வாக கூட்டத்தின் போது சமர்ப்பிக்க வேண்டும் எனவும் டாடா சன்ஸ் நிர்வாக குழுவிற்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அடுத்த முக்கிய டிரஸ்டி
ஜிம்மி டாடா போலவே ஜஹாங்கிர் ஜஹாங்கிர் என்ற மற்றொரு டிரஸ்ட் நீண்ட காலமாக டாடா டிர்ஸ்ட் அமைப்பில் உறுப்பினராக இருந்தும் நிர்வாக முடிவுகளில் கலந்துகொள்ளாமல் இருந்து வருகிறார். டாடா குழுமத்தில் தற்போது நடக்கும் பிரச்சனைகள் குறித்து இதுவரையில் ஜஹாங்கிர் ஜஹாங்கிர் எவ்விதமான கருத்தையும் டாடா டிரஸ்ட் அமைப்பிடம் சமர்ப்பிக்கவில்லை.
நோயல் டாடாவுக்கு அடுத்த பெரிய கை
மேலும் டாடா டிரஸ்ட் அமைப்பில் நோயல் டாடாவுக்கு அடுத்தபடியாக அதிக பங்குகளை வைத்திருப்பது ஜிம்மி டாடா தான். இவரிடம் சுமார் 0.81 சதவீதம் அதாவது 3,262 பங்குகள் உள்ளது.
டாடா சன்ஸ் நிர்வாகம், நோயல் டாடா தலைமையிலான டாடா டிரஸ்ட் அமைப்பிடம் இருந்து கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் வேளையில் ஜிம்மி டாடாவின் கருத்து என்பது முக்கிய திருப்பு முனையாக உள்ளது.


Click it and Unblock the Notifications
