டாடா சன்ஸின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உடல் நல குறைவால் அக்டோபர் 9ஆம் தேதி இரவு மும்பை மருத்துவமனையில் மறைந்தார். இந்த வார திங்கட்கிழமை மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், இன்று மாலை மீண்டும் மோசமான உடல் நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இந்த நிலையில் தற்போது டாடா குழுமத்தின் தலைவராக இருக்கும் என்.சந்திரசேகரன் ரத்தன் டாடா மறைவையொட்டி மிகவும் உருக்கமான பதிவை செய்துள்ளார்.

"டாடா குழுமத்தையும், நம் நாட்டின் அடிப்படை அமைப்பையும் வடிவமைத்த அசாதாரணமான தலைவரான ரத்தன் நவல் டாடா நம்மை விட்டு விடைபெறுவது மிகுந்த துயரத்தை அளிக்கிறது. இவருடைய மறைவு பெரும் இழப்பாகும்.
டாடா குழுமத்திற்கு, ரத்தன டாடா வெறும் தலைவர் என்பதை விட அதிகமானவர். எனக்கு அவர் ஆலோசகராகவும், வழிகாட்டியாகும் மற்றும் நண்பராகவும் இருந்துள்ளார். அவருடைய நேர்மை மற்றும் புதுமைக்கான அசைக்க முடியாத உறுதிப்பாடு, அவரது தலைமையின் கீழ் டாடா குழுமம் உலகளாவில் வர்த்தக துறையில் பெரும் சாதனையை படைத்தது. அதே நேரத்தில் வர்த்தக துறையில் எப்போது நெறிமுறையுன் உண்மையாக இருந்தது.
ரத்தன் டாடாவின் தொண்டு மற்றும் சமூக மேம்பாடுக்கான அர்ப்பணிப்பு பல கோடி மக்களின் வாழ்க்கையை தொட்டுள்ளது. கல்வி முதல் சுகாதாரம் வரை, அவரது முயற்சிகள் பல தலைமுறைகளுக்கு பயனளிக்கும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஒட்டுமொத்த டாடா குழுமத்தின் சார்பில், அவரது குடும்பத்திற்கும், அன்புக்குரியவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் தீவிரமாக ஆதரித்த கொள்கைகளை நாங்கள் நிலைநிறுத்த தொடர்ந்து முயற்சிப்போம் என்று சந்திரசேகரன் தனது அறிக்கையில் ரத்தன் டாடா மறைவு குறித்து குறிப்பிட்டு இருந்தார்.


Click it and Unblock the Notifications