ரத்தன் டாடா உலகளவில் பிரபலமான இந்திய தொழிலதிபர் ஆவார். அவருக்கு சோசியல் மீடியாவில் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. தனது நிறுவனத்துக்கும் நாட்டுக்காகவும் ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்டவர் ரத்தன் டாடா.
இந்த நிலையில் ஒரு சாமானியன் காரில் சென்றால் எப்படியிருக்கும், அவனது மனம் எப்படி மகிழ்ந்து போகும் என்று மக்களின் மனதின் வழியாக அவர்களது உணர்வுகளைப் படித்துப் புரிந்து கொண்டார் ரத்தன் டாடா. இதன் விளைவாக உருவான கார் தான் நானோ கார்.

நடுத்தர வகுப்பைச் சேர்ந்த இந்திய குடும்பங்களின் கனவாக இருக்கும் கார் மோகத்தை நனவாக்கவும், அதேபோல் பாதுகாப்பாக செல்ல அறிமுகப்படுத்தியது தான் நானோ கார். ஆனால் அறிமுகப்படுத்திய குறுகிய காலத்திலேயே அதன் உற்பத்தி நின்றுவிட்டபோதும் இந்தியாவில் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட மிகக் குறைந்த விலையிலான கார் என்றால் அது டாடா நானோ கார்.
கடந்த சில காலமாகவே டாடா நானோவின் எலக்ட்ரிக் வெர்ஷன் குறித்து சீரியஸாக யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. விரைவில் டாடா நானோவின் புதிய கார் இந்திய சந்தையில் டயர் எடுத்து வைக்கும் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. அப்படி வந்தால் நடுத்தர மக்களுக்கு ஏகக்குஷியாக இருக்கும்!
இருப்பினும் டாடா நானோ மீண்டும் வருமா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலையும் டாடா மோட்டார்ஸ் வெளியிடவில்லை. இருப்பினும் அந்தக் காரின் பாரம்பரியம் குறித்து இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
ஒருபக்கம் டாடா நானோ காரின் மறுபிரவேசத்துக்காக கார் மற்றும் ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் எல்லாம் காத்திருக்க ரத்தன் டாடாவின் கனவுக் காரான நானோவை வடிவமைத்த மனிதரான கிரிஷ் வாக் பெயர் தற்போது இணையத்தில் டிரெண்டாகியுள்ளது. யார் இவர்..?
புனே-வை சேர்ந்த இந்த பொறியாளர் கிரிஷ் வாக் மகாராஷ்டிரா இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜியில் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பட்டத்தை பெற்றார். உற்பத்தி பற்றிய முதுநிலை பாடத்தை மும்பை பி-ஸ்கூல் எஸ்பி ஜெயின் இன்ஸ்டிட்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்டு ரிசர்ச் கல்லூரியில் படித்தார்.
டாடா நானோவுக்கு முன்பாக டாடா மோட்டார்ஸின் பிரபல டாடா ஏஸ் மினி டிரக்கை சிறப்பாக வடிவமைத்ததற்காக பெயர் பெற்றவர்.
1997 ஆம் ஆண்டில் இந்திய வர்த்தகர்கள் மேம்பாட்டு குழுவின் முக்கிய உறுப்பினராக கிரிஷ் இருந்தார்.
டாடா ஏஸ் டிரக்கின் வெற்றியைத் தொடர்ந்து ரத்தன் டாடாவும், ரவி காந்த்தும், கிரிஷ்ஸை சிறிய கார் திட்டத்துக்கு மாற்ற முடிவு செய்தனர். இதன்படி டாடா நானோ தயாரிப்பில் கிரிஷ் வாக், ஜஸ்டின் நோரெக், பியரி காஸ்டினல் ஆகிய தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பணியாற்றத் தொடங்கினார்.
அதன்படி சில ஆண்டுகள் ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்துதலில் கழிந்தன. ஒருவழியாக டாடா மோட்டார்ஸ் 2008இல் டாடா நானோவை அறிமுகப்படுத்தியது. இரட்டை சிலிண்டர் இஞ்சின் பொருத்தப்பட்டு இயக்கப்பட்டது. டாடா நானோ காரின் அறிமுக விலை ரூ.1 லட்சம். வந்த வேகத்தில் மளமளவென விற்றுத் தீர்ந்தது நானோ கார். ஆனால் அதைத் தொடர்ந்த வருடங்களில் விற்பனை படிப்படியாகப் படுத்துவிட்டது. ஒருகட்டத்தில் நானோ உற்பத்தியை டாடா மோட்டார்ஸ் நிறுத்திக் கொண்டது.
இப்போது டாடா நானோ கிடைக்காது என்றாலும் புதிய ஜெனரேஷன் ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் அந்த சிறிய வடிவ, விலை குறைந்த, இந்தியாவின் போக்குவரத்து நெரிசலைக்கு தீர்வு தரக்கூடிய ரத்தன் டாடா மற்றும் கிரிஷ் வாகின் தொலைநோக்குப் பார்வையை பாராட்டிக் கொண்டு தான் உள்ளனர்.
கிரிஷ் வாக் இப்போது டாடா மோட்டார்ஸின் கமர்ஷியல் வெஹிகில்ஸின் தலைவராகவும் ரூ.2,64,000 சந்தை மதிப்புள்ள டாடா மோட்டார்ஸின் எக்ஸிகியூட்டிவ் டைரக்டராகவும் உள்ளார். மீண்டும் வருமா டாடா நானோ?
மீளுமா நடுத்தர மக்களின் சொந்தக் கார் கனவு? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications