டாடா குழுமத்தின் குவிக்-காமர்ஸ் தளமான பிக்பாஸ்கெட், இப்போது எலக்ட்ரானிக்ஸ் துறைக்குள் நுழைந்துள்ளது. ஆப்பிள் ஐபோன் 16 உள்ளிட்ட பொருட்களை வெறும் 10 நிமிடங்களில் விரைவாக டெலிவரி செய்து வருகிறது. புதிய எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் லேப்டாப்கள், பிளேஸ்டேஷன் கன்சோல்கள், ஸ்மார்ட்போன்கள், மைக்ரோவேவ்கள் மற்றும் பல பொருட்களை டெலிவரி செய்கிறது. ஏற்கனவே இதுப்போன்ற சேவையை செப்டோ, மற்றும் பிளிங்கிட் ஆகியவை வழங்கி வரும் நிலையில் தற்போது பிக்பாஸ்கெட் அதில் இணைந்துள்ளது.
பிக்பாஸ்கெட் இந்த 10 நிமிட டெலிவரிகளை எளிதாக்க க்ரோமாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்தச் சேவை செப்டம்பர் 20-ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் இப்போது ஆப்பிள் ஐபோன் 16 உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை எளிதாக ஆர்டர் செய்யலாம். ஆரம்பக்கட்டமாக பெங்களூரு, டெல்லி-என்சிஆர் மற்றும் மும்பையில் உள்ள பிக்பாஸ்கெட் பயனர்களுக்கு இந்தச் சேவை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மணி கண்ட்ரோலின் அறிக்கையின்படி பிக்பாஸ்கெட் அதன் அனைத்து சேவைகளையும் ஒரே ஒரு அப்ளிகேஷனில் இணைப்பது குறித்த திட்டத்தை துவங்கியுள்ளது. இதன் மிக முக்கியமான நோக்கம் என்னவென்றால் மக்களுக்கு அவர்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை மிகவும் விரைவாக கொண்டு சேர்ப்பதாகும். தற்போது 2 முதல் 3 மணி நேரத்திற்குள் பொருட்களை கொண்டு சேர்க்கும் நிறுவனம் 10 முதல் 20 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. வளர்ந்து வரும் வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப குவிக் காமர்ஸ் துறையில் பிக்பாஸ்கெட் செயல்பாடுகளைத் துவங்கியுள்ளது.
ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் இப்போது இந்தியாவில் கிடைக்கிறது. ஐபோன் 16 விலை ரூ. 79,900 ஆகவும், ஐபோன் 16 புரோ ரூ. 1,34,900 ஆகவும் உள்ளது.
பிளிப்கார்டின் ஆஃபர்: ஐபோன் 13 மாடலை மாற்றி ஐபோன் 16 மொபைல் வாங்க விருப்பப்படும் பயனர்களுக்கு பிளிப்கார்ட் நிறுவனம் ரூ.28,500 எக்ஸ்சேஞ்ச் மதிப்பை வழங்குகிறது. ஆனால் அதற்கு உங்களுடைய போன் குறைபாடற்ற நிலையில் இருக்க வேண்டும். மேலும் இதற்குக் கூடுதலாக ரூ.3000 ரூபாய் போனஸ் கிடைக்கும். இதனால் ஐபோன் 16 விலை ரூ.51,000 ரூபாயாக குறைகிறது. அதுவே ஐபோன் 12 மாடலை வைத்து ஐபோன் 16 வாங்கவிருக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.20,000 எக்சேஞ்ச் மதிப்பைப் பெறலாம். ஆப்பிளின் அதிகாரபூர்வ ஸ்டோர்களில் ஐபோன் 13 மாடலுக்கு 25,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆப்பிள் ஸ்டோர்களோடு ஒப்பிடுகையில் பிளிப்கார்ட் நிறுவனம் 3500 கூடுதல் மதிப்பு மற்றும் 3000 கூடுதல் போனஸும் கிடைக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications