இந்தியாவின் முக்கிய தொழிலதிபரான ரத்தன் டாடாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், அவர் வளர்த்த செல்ல நாய்க்குட்டி கோவா கலந்து கொண்டது மட்டும் அல்லாமல் அவரின் உடலின் அருகிலேயே படுத்திருந்தது, கீழே இறங்க மறுத்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
மும்பையில் உள்ள NCPA சென்டரில் நடைபெற்ற இறுதி சடங்கில், கோவா தனது அன்பான தலைவருக்கு இறுதி வணக்கம் செலுத்தியது. இந்த வீடியோ பலருக்கும் கண்ணீரை வரவழைத்தது.

சில ஆண்டுகளுக்கு முன் ரத்தன் டாடா கோவாவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தபோது அங்கு ரத்தன் டாடா, கோவா என்னும் பெயரிட்டு காப்பாற்றி தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். வாழ்நாள் முழுவதும் விலங்குகளை நேசித்த ரத்தன் டாடா, கோவாவை மிகுந்த அன்போடு பராமரித்து வந்தார். இருவரும் இடையேயான ஆழமான நட்பு இருந்ததை நிரூபிக்கும் வகையில் இறுதி நேரத்தில் இந்த வளர்ப்பு நாய் குட்டி கோவா ரதன் டாடாவுக்கு ஒரு நிலையான துணைவனாக இருந்தார்.
ரத்தன் டாடாவுக்கு விலங்குகளின் மீது கொண்ட ஈர்ப்பு, தெரு நாய்களுக்கு உதவுவதற்கான அவரது பல முயற்சிகளில் தெளிவாகத் தெரிந்தது. சமீபத்தில் மும்பையில் விலங்குகளுக்காகப் பிரம்மாண்ட மருத்துவமனையைக் கட்டியது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
இதேபோல் மும்பையில் டாடா குழுமத்தின் தலைமை அலுவலகமாக டாடா ஹவுஸ்-ல் எப்போது தெரு நாய்கள் தங்குவதற்கு இடமும், உணவும், தண்ணீரும் இருக்கும். இதே போல் ரத்தன் டாடா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் அடிக்கடி நாய்கள் குறித்த தத்தெடுப்பு கோரிக்கைகளை வெளியிடுவார் மற்றும் தெருக்களில் காயமடைந்த நாய்களுக்கு அடிக்கடி உதவி செய்வார்.
ரதன் டாடாவுக்கு தனது செல்லப்பிராணிகளின் மீது கொண்ட அன்பு மிகவும் வலுவானது, ஒருமுறை தனது நாய்க்குட்டி நோய்வாய்ப்பட்டு இருந்தபோது, அவருக்கு 2018 ஆம் ஆண்டில், பக்கிங்காம் அரண்மனையில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்ட நிகழ்வை கூட ரத்து செய்தார்.


Click it and Unblock the Notifications