மும்பை: ரத்தன் டாடாவுக்கு சொந்தமான இரண்டு அறக்கட்டளைகளை அவருடைய சகோதர சகோதரிகள் நிர்வகிக்க இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற தொழிலதிபரும் டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலமானார்.
ரத்தன் டாடா தன்னுடைய சொத்துக்கள் எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும் ,யாருக்கெல்லாம் அவை பகிரப்பட வேண்டும் என்பது குறித்து உயில் எழுதி வைத்திருந்தார். இருந்தாலும் அவர் உருவாக்கிய ரத்தன் டாட்டா எண்டோவ்மென்ட் பவுண்டேஷன் (Ratan Tata Endowment Foundation) மற்றும் ரத்தன் டாடா எண்டோமென்ட் டிரஸ்ட் (Ratan Tata Endowment Trust)ஆகிய இரண்டு அறக்கட்டளைகளையும் தனக்கு பின்னர் யார் நிர்வாகம் செய்வார், அதன் அறங்காவலர்கள் எவ்வாறு நியமிக்கப்பட வேண்டும் என்பது குறித்த எந்த விளக்கத்தையும் அவர் தன்னுடைய உயிலில் பகிரவில்லை.

இந்த இரண்டு அறக்கட்டளைகளும் டாட்டா சன்ஸ் குழுமத்தின் கீழ் வராது என்பதை அவர் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். மேலும் டாடா குழுமங்களில் தனக்கு இருக்கும் பங்குகளின் கணிசமான பகுதி இந்த இரண்டு அறக்கட்டளைகளுக்கும் செல்லும் என அவர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். எனவே இரண்டு அறக்கட்டளைகளையும் யார் நிர்வாகம் செய்வது இதற்கான அறங்காவலர்களை எவ்வாறு நியமனம் செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு குழப்பங்கள் இருந்தன.
இரண்டு அறக்கட்டளைகளுமே கல்வி மற்றும் சுகாதாரம், வறுமையில் இருக்கும் மக்களை மீட்டெடுப்பது உள்ளிட்ட பல்வேறு நலன்களுக்காக பாடுபடுகிறது. ரத்தன் டாடாவின் சொத்துக்களை விற்பனை செய்து எப்படி இந்த அறக்கட்டளைகளுக்கு மாற்றுவது என்பன உள்ளிட்ட சந்தேகங்கள் இருந்த நிலையில் இந்த இரண்டு அறக்கட்டளைகளுக்கான அறங்காவலர் அமைப்பு முறையில் மாற்றம் கொண்டுவரப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன்படி ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் பவுண்டேஷன் அறக்கட்டளைக்கு ஆறு அறங்காவலர்களும், ரத்தன் டாட்டா என்டோவ்மென்ட் டிரஸ்ட் அறக்கட்டளைக்கு ஏழு அறங்காவலர்களும் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு அறக்கட்டளைகளுக்கும் மேலாண்மை செய்யும் அறங்காவலராக டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் இருப்பார்.
மேலும் ஜாம்சீட் பூஞ்சா இந்த இரண்டு அறக்கட்டளைகளுக்கும் தலைமை செயல் அதிகாரியாக இருப்பார். அதேபோல ரத்தன் டாட்டாவின் சகோதரிகள் சீரேன் மற்றும் டியானாவும், சகோதரர் நோயல் டாடா ஆகியோரும் இந்த இரண்டு அறக்கட்டளைகளுக்கும் அறங்காவலர்களாக நியமனம் செய்யப்பட உள்ளனர்.
அறக்கட்டளை அறங்காவலர்களாக பணி செய்பவர்களுக்கு அதற்காக எந்த ஒரு பணமும் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்தன் டாடா தன்னுடைய உயிலை செயல்படுத்த வேண்டியவர்கள் என தன்னுடைய சகோதரிகள் சீரேன் மற்றும் டியானாவை நியமனம் செய்திருந்தார்.
தற்போது அவர்களே இரண்டு அறக்கட்டளைகளிலும் நியமனம் செய்யப்பட உள்ளனர். முன்னதாக இந்த பிரச்சினைக்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நடுவராக நியமனம் செய்து தீர்வு காணலாம் என கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர்களுக்குள்ளேயே தீர்வு எட்டப்பட்டுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications