இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் டாடா குழுமத்தில் அதிகப்படியான பங்குகளை வைத்திருக்கும் டாடா டிரட்ஸ் அமைப்பின் தலைவராக, டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ரத்தன் டாடா குறித்து எல்லோருக்கும் தெரியும், அவருடைய இளைய சகோதரர் பற்றி தெரியுமா..?
ரத்தன் டாடா தனது காதல் தோல்வி காரணமாக திருமணம் செய்துக்கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வரும் காரணத்தால் தனது குடும்பத்துடன் இளம் பருவத்தில் இருந்து இன்று வரையில் மிகவும் நெருக்கமாக உள்ளார். அதிலும் குறிப்பாக தனது இளைய சகோதர் ஜிம்மி நாவல் டாடா உடன் மிகவும் நெருக்கமாக உள்ளார்.

இந்த வருடத்தின் துவக்கத்தில் ரத்தன் டாடா தனது சகோதரர்-க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறும் போதும் 1945ல் எடுத்த ஒரு போட்டவை பகிர்ந்தார். யார் இந்த ஜிம்மி நாவல் டாடா..? ஜிம்மி நாவல் டாடா எங்கு, எந்த நிறுவனத்தில், எந்த பொறுப்பில் உள்ளார்..?
மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தில் முக்கிய உறுப்பினராக இருக்கும் ஜிம்மி நாவல் டாடா சோஷியல் மீடியாவில் இல்லை, சொல்லப்போனல் வர்த்தக உலகின் வெளிச்சத்திற்கு வர விரும்பாதவராக உள்ளார். ஜிம்மி நாவல் டாடா, ரத்தன் டாடா-வை போல் வர்த்தக துறைக்குள் வராமல் மீடியா வெளிச்சம் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.

டாடா குழுமத்தில் இவருக்கும் பங்கு இருக்கும் நிலையில் பல கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இருந்தாலும் மும்பையில் Colaba ஒரு 2 BHK வீட்டில் மிகவும் எளிமையாக வாழ்ந்து வருகிறார். ஜிம்மி நாவல் டாடா-விடம் ஒரு ஸ்மார்ட்போன் கூட இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
ரத்தன் டாடா வாழ்க்கையில் பல முக்கியமான விஷயங்கள் இன்று வரையில் அவருடைய மனதை காயப்படுத்திக்கொண்டு வருகிறது, குறிப்பாகத் தனது பர்சனல் வாழ்க்கையில் நடத்த சில விஷயங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரத்தன் டாடா-வின் பர்சனல் வாழ்க்கை குறித்து ஒரு பேட்டியில் பேசுகையில் என்னுடைய குழந்தை பருவம் நன்றாகச் சென்றது ஆனால் என்னுடைய பெற்றோர்களின் திருமணம் விவாகரத்தில் முடிந்ததை தொடர்ந்து என்னையும் என்னுடைய சகோதரரையும் நிறையக் கஷ்டங்களை இளமை பருவத்திலேயே கொடுத்தது.
அந்த நாளில் விவாகரத்து என்பது, இப்போது இருப்பது போல் சாதாரண விஷயம் அல்ல, இந்த கடிமான காலக்கட்டத்தில் எங்களைப் பாட்டி தான் கவனித்துக் கொண்டார்.
என்னுடைய அம்மாவுக்கு இரண்டாவது திருமணம் நடந்தபோது பள்ளியில் என்னையும் என் சகோதரரையும் புண்படும்படி பேசுவார்கள், கேலி செய்து எங்களைச் சண்டையிட தூண்டுவார்கள் என இந்த பேட்டியில் கூறினார். மேலும் ரத்தன் டாடா இந்தப் பேட்டியில் தன்னுடைய தந்தையுடன் தனக்கு இருக்கும் மனக்கசப்புகள் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications