இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான தொழிலதிபரான ரத்தன் டாடா-வின் மரணம் அவர் வளர்த்த நாய் குட்டி முதல், டாடா குடும்பம், டாடா குழும ஊழியர்கள், இந்திய தொழிலதிபர்கள், இந்திய மக்கள், வெளிநாட்டுத் தொழிலதிபர்கள் வரையில் பலருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ரத்தன் டாடா தனது உடல்நலம் மோசமாகி வருவதை முன்கூட்டியே அறிந்த நிலையில் டாடா குழுமத்தில் தன்னுடைய மரணத்திற்குப் பின்பு என்ன நடக்க வேண்டும்..? டாடா குழுமத்தின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும்..? தன்னுடைய சொத்துக்கள் யாருக்கெல்லாம் செல்ல வேண்டும் என்பது வரையில் முன்கூட்டியே திட்டமிட்டு உயில் எழுதி வைத்துள்ளார்.

ரத்தன் டாடா தனது நிர்வாக பொறுப்புகளைத் தாண்டி தனது தனிப்பட்ட சொத்துக்கள் தன்னுடைய மறைவிற்குப் பின்பு எப்படிக் கையாள வேண்டும் என்பதை உயிலாக எழுதி வைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது ரத்தன் டாடா-வின் உயில் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.
ரத்தன் டாடா மறைந்த பின்பு அவருடைய உடலை பார்க்க வந்த அவருடைய வளர்ப்பு நாய் டிட்டோ அவரின் உடலுக்கு அருகிலேயே அமர்ந்துகொண்டு கீழ் இறங்க மறுத்தது. இந்த வீடியோ அப்போது இணையத்தில் பெரிய அளவில் வைரலானது, இதை பார்க்கும் போதே ரத்தன் டாடா அந்த நாய்க்கு எவ்வளவு அன்பு காட்டியிருப்பார் என்பது அனைவருக்கும் புரியும்.
ஆனால் ரத்தன் டாடா ஒரு படி மேலே சென்று அவருடைய 10000 கோடி ரூபாய் மதிப்பிலான உயிலில் தனது வளர்ப்பு நாய்க்கு 'அளவற்ற' அன்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது மறைவுக்குப் பிறகு, அவருடைய நம்பகமான சமையல்காரர் ராஜன் ஷாவுக்கு தனது ஜெர்மன் ஷெப்பர்ட் நாயான டிட்டோ-வை பராமரிக்க ஒப்படைத்துள்ளார்.
இதன் மூலம் ராஜன் ஷா, டிட்டோ வளர்ப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தனது சொத்து மதிப்பில் இருந்து செலவு செய்யப்படும். இதன் மூலம் டிட்டோ-வின் வாழ்நாள் முழுவதுக்குமான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் ரத்தன் டாடா தனது நீண்டகால பணியாளரான பட்லர் சுப்பையாவுக்கும் தனது உயிலில் சில ஏற்பாடுகளை செய்துள்ளார். ரத்தன் டாடா-வின் பட்லர் சுப்பையா இவருடன் 30 வருடமாக பணியாற்றி வருகிறார்.
ரூ. 10,000 கோடிக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ள டாடாவின் சொத்து, அவரது அறக்கட்டளை, சகோதரர், சகோதரிகள், வீட்டு பணியாளர்கள் மற்றும் பிறருக்கு இடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்தில் 0.83% பங்கையும் ரத்தன் டாடா அறக்கட்டளைக்கு (RTEF) வழங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications