ரதிபாய் மக்வானா, குஜராத் பிக்கர்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் நிறுவனர் மற்றும் தலைவர். 1983 முதல் 1998 வரை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் குஜராத் சர்க்கிள் இயக்குநராக பதவி வகித்தார். 2015 ஆம் ஆண்டில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறந்த பிஸினஸ்ஸுக்கான தேசிய விருதை வழங்கி கௌரவித்தார்.
சாதியக் கொடுமையினால் தீண்டாமைக்கு ஆளாகி இருந்த நேரத்தில் அவர் டீ சப்ளை செய்து கொண்டிருந்தார். அவரை கோயிலுக்குள் செல்வதற்கு உயர்ஜாதி மக்கள் அனுமதி தரவில்லை. ஆனால் இன்றைக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்துக்குச் சொந்தக்காரரான அவரது நிறுவனத்தில் 3500 ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.

இந்தியத் தொழில்துறைக்கு ரதிபாய் மக்வானாவின் பங்கை ரத்தன் டாடா மனதார பாராட்டியுள்ளார். அவரது சாதனை சரித்திரத்தைப் பற்றி நாமும் தெரிந்து கொள்ள வேண்டும். யார் இந்த ரதிபாய் மக்வானா?
இளமைக்காலத்தில் ரதிபாய் மக்வானா பல தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆளானார். உயர்ஜாதி வகுப்பினரைச் சேர்ந்த சிறுவர்களுடன் விளையாட ரதிபாய் மக்வானா அனுமதிக்கப்படவில்லை. அவரது வீட்டுப் பக்கத்தில் இருந்த டீக்கடையில் அவர் வேலைபார்த்த போது யாரையும் தொடாமல் டீ சப்ளை செய்ய வேண்டும்.
ஒருமுறை கோயிலுக்குச் சென்ற மக்வானை அங்கிருந்த உயர் ஜாதியினர் அவரை கோயிலுக்கு வெளியே அடித்துத் துரத்தினர். ரதிபாய் மக்வானின் தந்தை ஒரு விவசாயி. வாழ்க்கையில் பல சிரமங்களை அவர்கள் அனுபவித்தனர்.
ஆனால் அவர்களுக்கு விதி வேறு சில திட்டங்களை வைத்திருந்தது. ரதிபாயும் அவரது தந்தையும் சேர்ந்து குஜராத் பிக்கர்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற ரசாயனங்களை விற்கும் நிறுவனத்தைத் தொடங்கினர்.
1962இல் இந்த குஜராத் பிக்கர்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தொடங்கப்பட்டது.
இது ஒரு பார்ட்னர்ஷிப் நிறுவனமாக தொடங்கப்பட்டு பிக்கர்ஸ் மற்றும் பிற உதிரி சாமான்களை உற்பத்தி செய்தது. பின்னர் பிளாஸ்டிக் பொருள்கள், பிளாஸ்டிக் பாலிமர், பென்சீன் சால்வன்ட் ஆகியவற்றை விநியோகம் செய்தது. ரதிபாயின் தொடக்ககாலம் கடும் போராட்டங்களை சந்தித்தது. அவரது போட்டி நிறுவனங்கள் அவரைக் கண்டு பயந்து புறக்கணிக்கத் தொடங்கின.
வங்கிகளும் அவரது நிறுவனத்துக்கு கடன் தர மறுத்தன. இருப்பினும் ரிதிபாய் பின்வாங்கவில்லை. அவர் தனது நிறுவனத்தை கடுமையான உழைப்பினால் மேலுக்குக் கொண்டு வந்தார். விரைவிலேய அந்தநிறுவனம் முன்னுக்கு வந்து தொழிலில் நன்றாக வேரூன்றியது.
2001 ஆம் ஆண்டு நிறுவனம் ஒரு லிமிடெட் கம்பெனியாக மாறியது. பாலிமர்கள், பெட்ரோகெமில்கள், அடிடிவ்ஸ் போன்ற தொழிலில் தனது நிறுவனத்தின் கவனத்தை ரதிபாய் திசை திருப்பினார். குஜராத்தில் விரிவுசெய்த பிறகு நாடுமுழுவதும் கிளைகளை பரப்பினார்.
பின்னர் ஒரு எக்ஸ்போர்ட் ஹவுஸை தொடங்கி சர்வதேச அளவிலும் தொழிலைக் கொண்டு சேர்த்தார். கெமிக்கல் டிஸ்ட்ரிபூஷன் தொழிலில் உலக அளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தனக்கென்று இந்தத் தொழிலில் தனி முத்திரையை ரதிபாய் உருவாக்கினார்.
கடன் தர தயங்கிய வங்கிகள் இப்போது அவரைத் தேடித்தேடி சென்று பார்த்தன. அவரைத் தொடத் தயங்கியவர்கள் எல்லாம் ரதிபாயுடன் நெருங்கிப் பழக விரும்பினர். இதுதான் வெற்றியின் உண்மையான சாதனையாகும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications