ராஜஸ்தான்: இந்தியாவில் பல்வேறு மாநில அரசுகளும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 450 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ரேஷன் கார்டுகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையிலும் இலவசமாகவும் அரிசி ,கோதுமை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மக்கள் ரேஷன் கார்டு மூலம் குறைந்த விலையில் உணவுப் பொருட்களை பெறுவதோடு மட்டுமில்லாமல் கேஸ் சிலிண்டரையும் குறைந்த விலையில் பெற இருக்கின்றனர்.

இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 450 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ராஜஸ்தான் அரசு உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் இணைப்பு பெற்றவர்களுக்கு மட்டுமே 450 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்களை வழங்கி வந்தது. தற்போது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இனி 450 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதற்கு ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய ரேஷன் அட்டையை எல்பிஜி ஐடியுடன் இணைக்க வேண்டும். இவ்வாறு இணைப்பவர்களுக்கு மட்டுமே குறைந்த விலையில் சிலிண்டர் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும் என ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழலில் ராஜஸ்தானில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவர்களில் 37 லட்சம் பேர் ஏற்கனவே உஜ்வாலா திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் கேஸ் சிலிண்டர்களை பெற்று வருகின்றனர். தற்போது மீதமுள்ள 68 லட்சம் குடும்பங்களுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த பலன்களை பெற வேண்டும் என விரும்பும் மக்கள் தங்களுடைய ரேஷன் கார்டுகளில் கேஒய்சி நடைமுறையை முடிக்க வேண்டும் என்றும் தங்களுடைய எல்பிஜி ஐடியையும் ரேஷன் கார்டையும் இணைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டிலும் அவர்களின் ஆதார் கார்டும் இணைக்கப்பட்டு இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிரதமர் உஜ்வாலா திட்டம் கடந்த 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு மற்றும் முதலாவது சிலிண்டர் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இதில் மானிய விலைக்கு சிலிண்டரை வழங்கி வந்த ராஜஸ்தான் அரசு தற்போது அதனை நீட்டித்துள்ளது.
தமிழ்நாட்டிலும் இத்தகைய திட்டம் கொண்டு வந்தால் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு பெரிய அளவில் பயனளிக்கும்.
More From GoodReturns

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications