தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருப்போர்களுக்கு தமிழக அரசு ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரேஷன் கார்ட் வைத்துள்ள குடும்பங்களின் குறைகளை தீர்க்க அரசு குறைதீர்ப்பு முகாமை நடத்தவுள்ளது. வரும் டிசம்பர் 14ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் திருத்தங்களைச் செய்வதற்கு தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு மாதமும் மண்டல வாரியாக சிறப்பு குறை தீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அந்த முகாம்களில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் மக்கள் தங்களுடைய பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.

ரேஷன் கார்டுகள் பொதுவாக பொதுமக்களுக்கு தேவையான அன்றாட உணவு பொருட்களான அரிசி, பருப்பு, சர்க்கரை கோதுமை, எண்ணெய் போன்ற பொருட்களை இலவசமாகவும், குறைந்த விலைக்கு வழங்கும் நோக்குடன் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், அரசு ஏதேனும் நல திட்டங்கள் அறிவித்தால் அவை அனைத்தும் ரேஷன் அட்டைதாரர்களுக்கே வழங்கப்படுகிறது. அந்த வகையில் வரும் ஜனவரி மாதம் 2025 ஆம் ஆண்டிற்கான பொங்கல் பரிசு தொகுப்பு, மாத மாத வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை போன்ற நலத்திட்ட உதவிகளையும் மக்கள் பெறலாம்.
எனவே, தற்போது ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் ரேஷன் கார்டுகளை புதுப்பிக்கவும், திருத்தமும் செய்ய வேண்டி இருக்கலாம். புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், பெயர் நீக்குதல் மொபைல் நம்பர் அப்டேட், பயோமெட்ரிக் அப்டேட் போன்ற திருத்தங்களும் செய்ய வேண்டியிருக்கலாம். தற்போது அரசு அறிவித்துள்ள இந்த குறைதீர்ப்பு முகாம் நல்ல வாய்ப்பு இருக்கும்.
வரும் டிசம்பர் 14ஆம் தேதி குறைதீர்ப்பு முகாமானது காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை மண்டல உதவி ஆணையர், வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு சற்று முன் வெளியிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் கார்டுகளை அப்டேட் செய்வது மட்டுமல்லாமல் ரேஷன் தொடர்பான அனைத்து புகார்களையும் பதிவு செய்யலாம். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள தமிழக அரசு கேட்டுகொண்டுள்ளது.
அதேபோல், ரேஷன் கடைகளில் முதியவர்கள், உடல் ஊனமுற்றோர்கள் நீண்ட வரிசையில் நின்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கென அங்கீகாரச் சான்று வழங்கப்படுகிறது. இதனை வைத்து அவர்கள் எளிதில் பொருட்களை வாங்கி செல்லலாம்.
தற்போது ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்காக நடத்தப்படும் இந்த சிறப்பு குறைதீர்ப்பு முகாம்களில் பொதுமக்கள் எந்தவொரு ரேஷன் கார்டு, ரேஷன் கடை, ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்ட எந்தவொரு பிரச்சினைகள் குறித்தும் புகார் அளிக்கலாம். இந்த புகாரின் மீது அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications