தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை அடுத்த வாரத்தில் கொண்டாடப்பட உள்ளது. தமிழர்களின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் இந்த பொங்கல் பண்டிகையானது தமிழக மக்களுக்கு மிகவும் விஷேசமான பண்டிகைகளில் ஒன்றாகும். பொங்கல் பண்டிகையன்று வீடுகளில் பொதுமக்கள் பொங்கல் வைத்துக் கொண்டாடுவர். இந்த நிலையில், இந்த பொங்கல் அன்று தமிழக அரசு சார்பில் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். இதற்கான டோக்கன் வழங்கும் பணிகள் கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் வீடுகள் தோறும் வழங்கப்பட்டு வந்தது. அதில் தேதி,நேரம் குறிப்பிட்டு வழங்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் நியாயவிலைக்கடை கடைகள் மூலமாகப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளை முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மட்டுமல்லாது இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வாழும் குடும்பத்தினருக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. அதேபோல், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இலவச வேட்டி, சேலை உள்ளிட்டவை விநியோகம் செய்யப்பட உள்ளன.
அதேபோல், கொரோனா நோய்தொற்றுக்கு பிந்தைய ஆண்டுகளில் ரேஷன் பொருட்களுடன் மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடிட பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கமாக பணம் வழங்கப்பட்டது. ரூ.1000 முதல் ரூ.2500 வரை பணம் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் மட்டும் தமிழக அரசு ரொக்கம் வழங்காது என்று தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கோபத்தில் உள்ளனர்.
இதற்கிடையில், நாளைத் தொடங்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகமானது வருகின்ற 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு முடிவடையும் வரை வழக்கமாக வழங்கப்படும் இலவச அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படாது என்றும், பொங்கல் பண்டிகை முடிவடைந்தப் பின்னர் வழக்கமாக வழங்கப்படும் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நியாயவிலைக் கடைகளில் இந்த பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். நாளை முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications