ரேஷன் கடையில் இப்படியொரு சேவை வருகிறதா.. வாவ்.. இனி பணத்திற்கு பிரச்சனையே இல்லை..!!

சென்னை: தமிழ்நாட்டில் செயல்படும் ரேஷன் கடைகளை சிறு ஏடிஎம் மையங்களாக மாற்றுவதற்கான முயற்சிகளை தமிழ்நாடு கூட்டுறவு துறை மேற்கொண்டுள்ளது. இதன்படி நம் வங்கி கணக்கில் உள்ள குறிப்பிட்ட அளவிலான தொகைகளை இனி ரேஷன் கடைகளிலேயே எடுத்து கொள்ளலாம்.

ரேஷன் கடைகளை மினி ஏடிஎம்களாக மாற்றும் போது அடிப்படை வங்கி சேவைகள் மற்றும் ஏடிஎம் சேவைகளை மக்கள் எளிதாக ரேஷன் கடைகள் வாயிலாகவே பெற்றுக் கொள்ள முடியும். எனவே வங்கி சேவைகளுக்காகவும் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பதற்காகவும் நீண்ட தூரம் செல்ல வேண்டிய தேவையில்லை.

ரேஷன் கடையில் இப்படியொரு சேவை வருகிறதா.. வாவ்.. இனி பணத்திற்கு பிரச்சனையே இல்லை..!!


இதற்காக தமிழ்நாடு அரசு ஆதார் அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் பேமென்ட் சேவைகளை கிராமப்புற பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

பயோமெட்ரிக் அங்கீகாரம் கொண்ட ஒரு டிஜிட்டல் கருவியானது ரேஷன் கடைகளில் நிறுவப்பட இருக்கிறது. இந்த கருவியின் மூலம் அடிப்படையான வங்கி சேவைகளை மக்கள் ரேஷன் கடைகள் வாயிலாகவே எளிதாக பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக ரேஷன் கடைகளில் வங்கி சார்ந்த ஒரு அதிகாரியும் பணிக்கு அமர்த்தப்பட இருக்கிறார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே மத்திய அரசு இப்படி ஒரு திட்டத்தை கொண்டு வருவதற்கு முடிவு செய்திருந்தது. ஆனால் இந்த மின்னணு பாயின்ட் ஆப் சேல் இயந்திரங்களை வங்கி சேவை தளங்களோடு இணைப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்ததால் அந்தத் திட்டம் அப்போது கைவிடப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு மீண்டும் இந்த திட்டத்தினை கையில் எடுத்துள்ளது. இதன்படி தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்துள்ள பேட்டியில் தமிழ்நாட்டில் எந்தெந்த ரேஷன் கடைகளில் எல்லாம் இதுபோன்ற மினி ஏடிஎம் சேவைகளை கொண்டு வரலாம் என்பது குறித்து தற்போது ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான அரசு ஆணை விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழ்நாட்டில் உள்ள 4500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் இருக்கின்றன, இவற்றில் சுமார் 3500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மைக்ரோ ஏடிஎம்களாக செயல்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மைக்ரோ ஏடிஎம்கள் மூலம் 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை பணப்பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். டெபிட் கார்டுகள் இல்லாதவர்கள், ஓய்வூதிய தொகை பெறும் முதியவர்கள் உள்ளிட்டோருக்கு தற்போது வங்கி ஊழியர்கள் மூலம் தான் பணப்பட்டுவாடா நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் சுமார் 35 லட்சம் முதியவர்கள் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தை பெறுகின்றனர். இவர்களில் 2.7 லட்சம் பயனாளர்கள் வங்கிக்கு நேரடியாக சென்றோ அல்லது அஞ்சலகங்கள் வாயிலாகவோ தான் தங்களது பணத்தை பெறுகிறார்கள்.

இவர்களால் ஏடிஎம்களை பயன்படுத்த முடியாது என்பதால் மலைப்பகுதிகள், இன்டர்நெட் வசதி குறைந்த பகுதிகளில் மக்களின் கைரேகைகளை பதிவு செய்து பணம் வழங்குவதிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே இவர்கள் வங்கிகளுக்கு அலைய வேண்டிய சூழல் உண்டாகிறது.

தமிழக அரசு எவ்வாறு பொங்கல் பரிசு, வெள்ள நிவாரண தொகைகளை ரேஷன் கடைகள் வாயிலாக எளிதாக வழங்குகிறதோ அதனை முன்மாதிரியாக கொண்டு ரேஷன் கடைகளிலேயே ஏடிஎம் சேவைகளை வழங்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இது நடைமுறைக்கு வந்தால் கிராமப்புற மக்கள் அதிகம் பயனடைவார்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+