மும்பை: இந்தியாவில் அண்மைக்காலமாக குறிப்பிட்ட சில பென்னி ஸ்டாக்குகள் கணிசமான லாபத்தை பெற்று தந்துள்ளன. அதில் பிரபலமான ஒரு பவர் செக்டார் பங்கு குறித்து தான் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்க இருக்கிறோம்.
ரேட்டன் இந்தியா பவர் (RattanIndia Power ) நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரே ஆண்டில் 250 சதவீதம் லாபத்தை பெற்று தந்துள்ளது. ரேட்டன் இந்தியா பவர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த ஐந்தாண்டு காலத்தில் 836 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

ஜூலை 2ஆம் தேதி பங்குச் சந்தையில் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலையானது 17 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 9,322 கோடி ஆகும். இந்த நிறுவன பங்கு மதிப்பின் ஃபேஸ் வேல்யு 10, புக் வேல்யூ8.13 ஆக இருக்கிறது.
இந்த நிறுவன பங்கின் 52 வார கால உச்சபட்ச மதிப்பு 21 ரூபாய் , 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 4 ரூபாய். 2024 ஆம் நிதியாண்டுக்கான நான்காம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் 1004 கோடி ரூபாயாக இருக்கிறது, இதுவே மூன்றாம் காலாண்டில் 896 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் இபிஎஸ் வேல்யூ என்பது நெகட்டிவ்வாக -2.03 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது.
இந்த நிறுவனத்தின் பங்குகளில் புரமோட்டர்கள் வசம் 44 சதவீத பங்குகள் இருக்கின்றன. சில்லறை முதலீட்டாளர்கள் வசம் 47 சதவீத பங்குகள் உள்ளன. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வசம் 2.03 சதவீத மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் வசம் 6.59 சதவீதம் பங்குகள் உள்ளன.
இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த சில ஆண்டுகளாகவே கணிசமான அளவு வளர்ச்சி பாதையிலேயே இருக்கிறது. இந்த நிறுவனத்தின் கடன் விகிதம் 0.82 என இருக்கிறது. இது ஸ்மால் கேப் நிறுவன பங்காக இருப்பதால் இதில் முதலீடு செய்யும் முன்பு முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை நிபுணர்கள் முன் வைக்கின்றனர்.
இந்தியாவில் ஸ்மால் கேப் பங்குகளின் மதிப்பு அளவுக்கு அதிகமாக உயர்வதாக நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். பொதுவாக இது போன்ற நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அவ்வளவு எளிதாக விற்பனை செய்ய மாட்டார்கள். எனவே சந்தையில் தினசரி அடிப்படையில் இதனை வாங்குவது அத்தனை எளிதல்ல.
Story written by: Devika
More From GoodReturns

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications