சர்வதேச அளவில் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் காக்னிசென்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக ரவி குமார் நியமிக்கப்பட்ட பின்பு அதிரடியாக போட்டி நிறுவனங்களில் இருக்கும் முன்னணி அதிகாரிகளை நியமித்து ஒட்டுமொத்த ஐடி சேவை நிறுவனங்களும் அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக காக்னிசென்ட் நிறுவனத்தின் வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையே வேகமாக விரிவாக்கம் செய்து மேம்படுத்த வேண்டும் என முக்கிய டார்கெட் ரவி குமார்-க்கு கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த முக்கிய இலக்கை அடைய ரவி குமார் தலைமையிலான காக்னிசென்ட் தற்போது இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னால் சிஇஓ-வான விஷால் சிக்கா நிறுவனத்துடன் கூட்டணி உருவாக்கியுள்ளது.
இன்போசிஸ் சிஇஓ பதவியில் இருந்து வெளியேறிய பின்பு விஷால் சிக்கா உருவாக்கிய நிறுவனம் தான் Vianai Systems. தற்போது காக்னிசென்ட் மற்றும் Vianai Systems இணைந்து ஜெனரேட்டிவ் ஏஐ சேவைகளை நேரடியாக சந்தையில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க ஒன்று சேர்ந்துள்ளது.
இந்த கூட்டணியில் Vianai Systems நிறுவனத்தின் hila Enterprise தளமும், காக்னிசென்ட் நிறுவனத்தின் Neuro AI தளமும் இணைக்கப்பட்டு, மிகவும் எளிதாக இயங்க கூடிய ப்ரெடிக்டிவ் மற்றும் AI தொழில்நுட்பம் மூலம் முடிவு எடுக்கும் சேவையை அளிக்க உள்ளது. மேலும் காக்னிசென்ட் மற்றும் Vianai Systems இணைந்து இரு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவையை அளிக்க உள்ளது.
இன்று ஒட்டுமொத்த டெக் நிறுவனம் ஏஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையாக இருக்கும் large language model (LLM) பணியாற்றி வரும் வேளையில் இதை எளிதாக பயன்பாட்டுக்கு கொண்டும் வரும் சேவையை தான் Vianai Systems நிறுவனத்தின் hila Enterprise தளம் வழங்குகிறது. காக்னிசென்ட் நிறுவனத்தின் சிஇஓ ரவி குமார் மற்றும் விஷால் சிக்கா கூட்டணி இன்போசிஸ் உயர்மட்ட நிர்வாகத்திற்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கும். காரணம் இருவரும் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரிகள்.
இன்போசிஸ் வரலாற்றில் பெரும் தடுமாற்றமும், நிர்வாக தடுமாற்றமும் எதிர்கொண்டது வெளியில் இருந்து ஒருவரை முதல் முறையாக சிஇஓ-வாக நியமிக்கும் போது தான். ஆம் இன்போசிஸ் நிறுவனர்கள் மாறி மாறி சிஇஓ பதவியில் அமர்ந்திருந்த காலம் முடிந்த பின்பு அடுத்தாக ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற திட்டத்தில் இன்போசிஸ் நிர்வாகம் பெரும் நம்பிக்கை உடன் விஷால் சிக்கா-வை நியமித்தது.
விஷால் சிக்க-வின் அனுபவம், நிர்வாகம், தொழில்நுட்ப நிபுணதுவம் என அனைத்தும் அனைத்து தரப்பினரையும் வியக்க வைத்தது. ஆனால் விஷால் சிக்கா வருகை மூலம் உயர் அதிகாரிகள் அதிகளவில் வெளியேறி வளர்ச்சி அளவுகள் பாதித்தது. இன்போசிஸ் சிஇஓ-வாக மிகவும் குறுகிய காலத்திற்கு மட்டுமே விஷால் சிக்கா சிஇஓ-வாக இருந்தார்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications