மும்பை: இந்திய வர்த்தக துறையில் சில மாதங்களுக்கு முன்பு பெரும் பேசுபொருளாக இருந்தது ரேமண்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கௌதம் சிங்கானியா மற்றும் அவருடைய மனைவி நவாஸ் மோடி மத்தியிலான விவாகரத்தும், நவாஸ் மோடி கேட்ட 75 சதவீத சொத்து ஜீவனாம்சம் கோரிக்கை தான்.
இது மட்டும் அல்லாமல் ரேமண்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கௌதம் சிங்கானியா-வுக்கும் அவரது தந்தை, சகோதரர், குடும்பத்திற்கு மத்தியில் பல ஆண்டுகளாகப் பிரச்சனை இருந்து வரும் வேளையில், இன்று கௌதம் சிங்கானியா டிவிட்டரில் பதிவிட்ட ஒரு போட்டோ ஒட்டுமொத்த வர்த்தக துறையைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

ரேமண்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கௌதம் சிங்கானியா இன்று தனது தந்தை விஜய்பட் சிங்கானியாவை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதாக, இருவரும் இருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் குடும்ப பிரச்சனை தொடர்பாகத் தந்தை விஜய்பட் சிங்கானியா, தனது மகன் கௌதம் சிங்கானியா மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை வைத்தார். தனது மகன் தன்னிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
தனக்கு ஒரு வீடு கூட கொடுக்கவில்லை என்றும், பெற்றோர்களே பிள்ளைகளுக்கு உங்களுடைய சொத்துக்களைக் கொடுக்கும் முன்பு கொஞ்சம் யோசித்து கொடுங்கள், அனைத்து சொத்துக்களையும் கொடுத்துவிடாதீர்கள் என்றும் அறிவுரை கூறினார்.
ரூ. 11539 கோடி சந்தை மதிப்பைக் கொண்ட ரேமண்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கௌதம் சிங்கானியா உள்ளார். மனைவி, குழந்தைகளை அடித்துத் துன்புறுத்திய பின்பு அவர்கள் அனைவரும் நீதா அம்பானி உதவியுடன் வெளியேறிய பின்னர் தற்போது 16 மாடி வீட்டில் தற்போது தனி ஆளாக வசித்து வருகிறார் கௌதம் சிங்கானியா.
2017 ஆம் ஆண்டு, தென் மும்பையில் உள்ள ஜே.கே ஹவுஸ் கட்டிடத்தின் இரு குடியிருப்புகளை ரேமண்ட் நிறுவனம் தனக்கு தரவில்லை என விஜய்பட் சிங்கானியா குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், 58 வயதான கௌதம் சிங்கானியா, கடந்த நவம்பர் 2023 இல் தனது மனைவி நவாஸ் மோடியிடம் இருந்து பிரிவதாக அறிவித்தார். இதையடுத்து, தனது சொத்துக்களில் 75 சதவீதத்தை தனக்கு வழங்க வேண்டும் என நவாஸ் மோடி கோரிக்கை வைத்த நிலையில் இந்த வழக்கு தற்போது நடந்து வருகிறது.
தற்போது, கௌதம் சிங்கானியா தனிமையில் இருப்பது மட்டும் அல்லாமல் விவாகரத்து வழக்கில் சிக்கி இருக்கிறார். கௌதம் சிங்கானியா, நவாஸ் மோடி தம்பதியினருக்கு நிஹாரிகா மற்றும் நிசா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
1986 ஆம் ஆண்டு சிங்கானியா குடும்பத்தின் ஜே.கே குழுமத்தில் இணைந்த கௌதம் சிங்கானியா, பின்னர் 1990 ஆம் ஆண்டு ரேமண்ட் குழுமத்தில் இணைந்து தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

கேரள சம்மர் பம்பர் லாட்டரி BR-108 முடிவுகள் ரூ.10 கோடி ஜாக்பாட் யாருக்கு?



Click it and Unblock the Notifications