விஜய்பட் சிங்கானியா வாழ்க்கை கதை: தனது தந்தையை வாடகை வீட்டிற்கு அழைத்து வந்த கோடீஸ்வரன் மகன். முகேஷ் அம்பானியை விட ஒரு காலத்தில் பணக்காரர். ஆனால் மகனால் அனைத்தையும் இழந்தார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் இந்த முகேஷ் அம்பானியை விட பணக்கார தொழிலதிபர் ஒருவர் இந்தியாவில் இருந்தார் என்பது தெரியுமா? ஆனால் இப்போது இல்லை. ஏனென்றால் அவருடைய புகழ் காலம் முடிந்துவிட்டது. ஒரு காலத்தில் இந்தியாவின் பணக்கார மற்றும் செல்வாக்கு மிக்க தொழிலதிபராக இருந்த விஜய்பட் சிங்கானியா பற்றிய தகவல் தான் இது.
செல்வத்தின் உச்சியில் இருந்து வாடகை வீட்டிற்கு மாறிய சிங்கானியா, இன்றளவும் இது பலருக்கும் விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது. உலகையே அதிர வைத்த ரேமண்ட் என்ற ஜவுளி சாம்ராஜ்யத்தின் அதிபராக இருந்தவர் இந்த தொழிலதிபர் விஜய்பட் சிங்கானியா. வியாபாரம் பெருகும் போது குடும்பத்தைக் கவனிக்க மறந்துவிட்டார். கடைசியில் அவர் நடுத்தெருவில் இருக்கிறார் என்பதே உண்மை.

இந்தியாவின் முன்னணி ஜவுளி மற்றும் ஆடைத் தொழிலான ரேமண்ட் குழுமத்தின் முன்னாள் தலைவர் இப்போது ஒன்றுமில்லாமல் சாதாரண வாழ்க்கை முறையில், வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவரது தலைமையில் ரேமண்ட் செய்த சாதனைகள் கணக்கிட முடியாதவை. ஃபேஷன் மற்றும் டெக்ஸ்டைல்ஸில் வேறு எந்த பிராண்டிலும் ரேமண்ட் போன்ற பிரபலம் இல்லை. சிங்கானியா தனது மாமா ஜி.கே. சிங்கானியா இறந்த பிறகு ரேமண்ட் குழுமத்தின் பொறுப்பை ஏற்றார்.
இந்தியாவில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் வெற்றிகரமான பிராண்ட்களில் ஒன்றாக ரேமண்டை வளர்க்க அவருக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. மிக விரைவாகவே இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபர் என்ற அந்தஸ்துக்கு அவர் பெயர்பெற்றார். அவரது தொழில் வாழ்க்கையின் உச்சத்தில், அவர் சொத்துக்களின் அடிப்படையில் இந்தியாவின் மற்ற பணக்காரர்களை விட மிகவும் உயர்ந்த நிலையில் இருந்தார்.
முகேஷ் அம்பானி, கெளதம் அதானி, ரத்தன் டாடா மற்றும் பிர்லா உட்பட வணிகத்தில் சில பெரிய நிறுவன உரிமையாளர்களை விட அவரது சொத்துக்கள் அதிகரித்தது. இதற்கிடையில், குடும்பத் தொழிலான ரேமண்ட் குழுமத்தை அவரது இரு மகன்களுக்கு இடையே பிரித்துவிட முடிவு செய்ததே அவரது மிகப்பெரிய தவறு.
மூத்த மகன் மதுபதி சிங்கானியா சிங்கப்பூருக்குச் சென்று குடும்பத் தொழிலில் இருந்து விலகி இருந்தார். இதன் மூலம் இளைய மகன் கௌதம் சிங்கானியா நிறுவனத்தை கைப்பற்றினார். அவர் நிறுவனத்தை கைப்பற்றிய உடனேயே அப்பாவும் மகனும் பிரிந்துவிட்டார்கள். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட தகராறு அதிகரித்ததால், விஜய்பட் சிங்கானியா, ரேமண்ட் குழுமத்தில் உள்ள தனது பங்குகள் அனைத்தையும் கௌதமுக்கு மாற்றினார். இத்துடன் அவரும் வீழ்ச்சி அடைந்தார்.
இறுதியாக, கௌதம் தனது தந்தையை தனது சொந்த வீட்டிலிருந்து வெளியேற்றினார். விஜய்பட், தற்போது வாடகை வீட்டில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஆனால் மகன் கோடீஸ்வரன் வாழ்க்கை வாழ்கிறான். சிங்கானியாவின் கதை வணிகத்துடன் குடும்பத்தை கவனிக்க வேண்டியதையும், இது செல்வம், குடும்பம் மற்றும் வெற்றியை சமநிலைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டுகிறது.


Click it and Unblock the Notifications