இந்திய வர்த்தக உலகில் முக்கிய விவாத பொருளாக இருப்பது கௌதம் சிங்கானியா - நவாஸ் மோடி மத்தியிலான பிரச்சனை தான். நவாஸ் மோடிக்கு தீபாவளி பார்ட்டியில் கௌதம் சிங்கானியா செய்த கொடுமைக்குப் பின்பு இவருக்கும் மத்தியிலான பிரச்சனை மிகப்பெரியதாக வெடிக்கத் துவங்கியுள்ளது.
நவாஸ் மோடிக்கு ஆதாரமாக அவருடைய மாமியாரும் இருப்பது, தீபாவளிக்கு முன்பு வீட்டில் செய்யப்பட்ட பூஜை அதைத் தொடர்ந்து பேத்திக்கும், மருமகளுக்கும் ஆசி வழங்கிய வீடியோ, போட்டோ மூலம் தெரிந்த நிலையில் தற்போது கௌதம் சிங்கானியா தந்தை அதிரடியாக ஒரு பேட்டியை கொடுத்துள்ளார்.

ரேமண்ட் குழுமத்தின் நிறுவனர் விஜய்பத் சிங்கானியா, தனது மகன் கவுதம் சிங்கானியா நிறுவனத்தை உடைப்பதைக் கண்டு மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளார் பிஸ்ன்ஸ் டூடே பேட்டியில் தெரிவித்துள்ளார். சிங்கானியா வீட்டில் நடக்கும் இத்தகைய பிரச்சனை புதியது இல்லை, தந்தை - மகனுக்கும் மத்தியிலான பிரச்சனையின் போது மொத்த சொத்துக்களையும் கௌதம் சிங்கானியா கைப்பற்றினார்.
விஜய்பட் சிங்கானியா மற்றும் கௌதம் சிங்கானியா இடையே ஒரு காலத்தில் நெருங்கிய உறவு இருந்தது, ஆனால் கசப்பான குடும்பச் சண்டையில் தந்தை - மகன் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. இந்தக் குடும்பச் சண்டையின் முடிவில் 2015 ஆம் ஆண்டில் ரேமண்ட் குழுமத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் தனது மகன் கௌதம் சிங்கானியா-வுக்கு விஜய்பட் சிங்கானியா வழங்கினார்.
விஜய்பட் சிங்கானியா சிறிய அளவில் துவங்கி ரேமண்ட் நிறுவனத்தை உலகம் போற்றும் பிராண்டாக மாற்றினார். தனது பாதையையும், கனவுகளையும் பில்லியன் டாலர் இந்திய ஜவுளி சாம்ராஜ்யத்தையும் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்துவார் என்ற நம்பிக்கையிலும் குடும்பச் சண்டையின் காரணமாகவும் மொத்த நிர்வாகம், சொத்துக்களை மகன் கௌதம்-க்கு விஜய்பட் கொடுக்க முடிவு செய்தார்.
இந்த நிலையில் 85 வயதான விஜய்பத் சிங்கானியா, தனது மகன் "கௌதம் சிங்கானியா நிறுவனத்தை உடைப்பதைக் கண்டு மிகுந்த ஏமாற்றமடைந்ததாகவும், எல்லாவற்றையும் கொடுத்துவிடும் நிலைக்கு வந்துள்ளது அவனுடைய முட்டாள்தனமான தவறு",என்றும் இந்தப் பேட்டியில் பேசியுள்ளார்.
மேலும் விஜய்பத் சிங்கானியா இந்தப் பேட்டியில் கௌதம் சிங்கானியா "ரேமெண்ட் நிறுவனத்தை இழப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது, ஆனாலும் நான் இதில் தலையிடப்போவது இல்லை. என்ன செய்ய வேண்டும் என்பதையும் வழிகாட்டப்போவது இல்லை, என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்ந்துவிட்டேன் இன்னும் 2-3 வருடமே இருக்கப்போகிறேன்", என்றும் இந்தப் பேட்டியில் பேசியுள்ளார்.
மேலும் "அனைத்து பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளுக்கு மொத்தமாக அனைத்து சொத்துக்களையும் அளிப்பதையும் விஜய்பத் சிங்கானியா எச்சரித்துள்ளார்" 85 வயதான விஜய்பத் சிங்கானியா.
கௌதம் சிங்கானியா தனது 32 வருட திருமண வாழ்க்கையை உடைத்து மனைவி நவாஸ் மோடியுடன் விவாகரத்துச் செய்ய முடிவு செய்ய முடிவு செய்திருக்கும் வேளையில், அவருடைய மனைவி மற்றும் இரு மகள்களுக்காகக் கௌதம் சிங்கானியா சொத்தில் 75 சதவீதத்தைக் கோரியுள்ளார். இதனால் நிர்வாகம், வீடு, பணம், கார், பேங்க் பேலென்ஸ் என அனைத்திலும் அதிகாரம் நவாஸ் மோடி பக்கம் செல்கிறது.
இதன் காரணமாகவே விஜய்பத் சிங்கானியா, தனது மகன் கௌதம் சிங்கானியா செய்தது முட்டாள்தனமான தவறு என்றும் புலம்புகிறார். விஜய்பத் சிங்கானியா தற்போது ஓய்வுபெற்ற தொழிலதிபராகப் பார்க்கப்படுகிறார், வர்த்தகத் துறையில் கொடிகட்டிப் பறந்த அவர் தந்தை - மகன் மத்தியிலான குடும்பச் சண்டையில் ரேமண்ட் குழுமத்தில் இருந்து மொத்தமாக வெளியேறியுள்ளார்.
2015ல் ரேமெண்ட் குழுமத்தில் இருந்து மொத்தமாக விஜய்பத் சிங்கானியா-வை வெளியேற்றிய பின்பு, 2017ஸ் பெற்றோர்களை JK வீட்டில் இருந்தும் வெளியேற்றினார் கௌதம் சிங்கானியா. 2018ல் ரேமெண்ட் குழுமத்தின் சேர்மன் எமிரிட்டஸ் பதவியில் இருந்தும் விஜய்பத் சிங்கானியா-வை கௌதம் சிங்கானியா நீக்கினார்.
2015ல் குடும்பச் சண்டையின் ஒப்பந்தம் படி ரேமண்ட் குழுமத்தில் ஒரு பகுதியைத் தந்தைக்குக் கொடுப்பதாகக் கௌதம் சிங்கானியா ஒப்புக்கொண்டால் ஆனால் அதையும் செய்யவில்லை என இந்தப் பேட்டியில் புலம்பியுள்ளார் 83 வயதான தொழிலதிபர் விஜய்பத்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications