மும்பை: ரேமண்ட் குழுமத்தின் தலைவர் கௌதம் சிங்கானியா மற்றும் அவரது மனைவி நவாஸ் மோடி மத்தியிலான பிரச்சனை, விவாகரத்து, 75 சதவீத சொத்து கோரியது ஆகிய பிரச்சனைகளைத் தொடர்ந்து 3 நிறுவனங்களில் நிர்வாக குழுவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டது இந்திய கார்ப்ரேட் உலகில் பெரும் விவாத பொருளாக மாறியது.
இந்த பிரச்சனைக்கு நடுவில் மெக்லாரன் நிறுவனத்தின் புதிய காரை வாங்கி இருக்கும் ரேமண்ட் நிறுவன தலைவர் கௌதம் சிங்கானியா இக்காரில் மும்பை சாலைகளில் பறந்து கொண்டிருக்கிறார்.

பெரும் பணக்காரர்கள் தங்களது செல்வாக்கை சொகுசு கார்களை பயன்படுத்துவதன் மூலமே வெளிப்படுத்துகின்றனர். இவர்களுக்காகவே பல நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு சூப்பர் கார்களை தயாரிக்கின்றன.
இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் சொகுசு கார்கள் என பேசும்போது நிச்சயமாக கௌதம் சிங்கானியா இதில் முன்னணியில் இருப்பார்.
கௌதம் சிங்கானியாவுக்கு ஆடம்பர கார்களை வாங்குவதே ஒரு பொழுதுபோக்காக இருக்கிறது. இவரிடம் இல்லாத பிராண்ட் கார்களே இல்லை என கூறும் அளவுக்கு தேடி தேடி கார்களை வாங்குகிறார். அவ்வப்போது இவர் வாங்கும் கார்களின் படங்கள் சமூக வலைதளங்களில் ரெண்டாகிவிடும்.
அண்மையில் கார்டோக் தளம் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் கௌதம் சிங்கானியா புதிதாக மெக்லாரன் 750s காரை வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே இவர் மெக்லாரன் நிறுவனத்தின் இரண்டு கார்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார். தற்போது மூன்றாவது காரை வாங்கி இருக்கிறார். ஆரஞ்சு மற்றும் கருப்பு நிறம் கொண்ட இந்த கார் காண்போர் கண்களை பறிக்கிறது. ஸ்டைலான இந்த காரில் அவர் மும்பையை வலம் வருகிறாராம்.
மெக்லாரன் 750s கார் அதிக திறன் கொண்ட ஒரு சூப்பர் மாடல் கார் ஆகும்.இதில் 4.0 லிட்டர் டிவின் டர்போ பிளாட் பிளேன் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 6 கோடி ஆகும். கௌதம் மெக்கானியா ஏற்கனவே மெக்லாரன் 750s காரானது, மெக்லாரன் 720 s ஐ விட 10% வேகமாக செல்லக்கூடியது.
அதாவது 2.8 நொடிகளில் மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை எட்டக்கூடிய கார் என தெரியவந்துள்ளது. அதே போல 4.4 நொடிகளில் மணிக்கு 200 கிலோமீட்டர் என்ற வேகத்தை எட்டும் திறன் கொண்டது.
ஏற்கனவே இவர் மெக்லாரன் 720 s, மெக்லாரன் 570 s ஆகிய கார்களை பயன்படுத்தி வருகிறார். கௌதம் சிங்கானியா ஃபெராரி 296 ஜிடிபி, மஸராட்டி உள்ளிட்ட பல்வேறு சொகுசு கார்களை பயன்படுத்தி வருகிறார்.
story written by: Devika


Click it and Unblock the Notifications