ரேமண்ட் குழுமத்தின் தலைவர் கௌதம் சிங்கானியா மற்றும் அவரது மனைவி நவாஸ் மோடி பிரிந்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வெடித்தது. இதற்கு மத்தியில் நவாஸ் மோடி தனக்கும் தனது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் கௌதம் சிங்கானியா-வின் மொத்த சொத்து மதிப்பில் 75 சதவீதத்தைக் கோரினார்.
இதற்குக் கௌதம் சிங்கானியா சொத்தை பிரித்துத் தருவதாக ஒப்புக்கொண்டார், ஆனால் அதை ஒரு டிரஸ்ட் வடிவிலும், இந்த டிரஸ்ட்-க்கு தான் தலைவராக இருப்பதாகக் கண்டிஷன் வைத்தார் (இதன் மூலம் ரேமண்ட் குழுமத்தின் நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைக்கக் கௌதம் செய்யும் முயற்சி). ஆனால் இதை நவாஸ் மோடி திட்டவட்டமாக மறுத்தார்.

இந்த நிலையில் கௌதம் சிங்கானியா - நவாஸ் மோடி விவாகரத்து மற்றும் சொத்துக்களைப் பிரிக்கும் பணிகளுக்குத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன என்று தம்பதியினருக்கு நெருக்கமான சட்ட அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இரு தரப்பிலிருந்தும் வழக்கறிஞர்கள் சமீபத்திய நாட்களில் சாதகமான முடிவை எடுக்க விவாதங்கள் நடத்தி வருகின்றனர் எனவும் தெரிகிறது.
கௌதம் சிங்கானி - நவாஸ் மோடி மத்தியிலான திருமண உறவு 32 வருடம் காலம், இந்தத் திருமணத்தின் மூலம் இருவருக்கும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் விவாகரத்துச் செய்யக் கௌதம் சிங்கானியா முடிவை எடுத்தார், இதனால் அவரின் 1.4 பில்லியன் டாலர் மொத்த சொத்து மதிப்பில் 75% தனது இரண்டு மகள்களுக்கும் தனக்கும் உரிமை கோரியுள்ளார்.
நாவஸ் மோடியின் 75% பங்கீட்டுக்கான கோரிக்கைக்கு, இரு தரப்பும் மிகவும் யதார்த்தமான ஒரு தீர்வுக்கு ஒப்புக்கொண்டதாகக் கௌதம் சிங்கானியாவுக்கு நெருக்கமான சட்ட வல்லுநர்கள் கூறினார். ஆனாலும் இரு தரப்புக்கும் மத்தியிலான முடிவின் விபரத்தைக் கூற மறுத்துவிட்டனர்.
கௌதம் சிங்கானியா - நவாஸ் மோடி விவாகரத்து மூலம் ரேமண்ட் குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகத்திலும் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது, இதேவேளையில் நிர்வாகக் குழுவை சிறந்த வழியில் வழிநடத்த Berjis Desai என்ற மூத்த தனியார் சட்ட ஆலோசகரை ரேமண்ட் குழுமம் நியமித்துள்ளது.
இதனால் விவாகரத்து மத்தியில் கௌதம் சிங்கானியா-வின் தவறான முடிவுகள் சரி செய்யப்படும் என ரேமண்ட் நிர்வாகம் நம்புகிறது. ரேமண்ட் பங்குகள் இன்று 1.04 சதவீதம் உயர்ந்து 1578.95 ரூபாயாக உள்ளது, ஆனால் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 16.36 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications