இந்தியாவின் ஆடை வரலாற்றில் நீண்ட காலமாகத் தனக்கெனத் தனி அடையாளத்தைக் கொண்டு இருக்கும் Raymond குரூப் லைப்ஸ்டைல் துறையில் அசத்தி வந்தாலும் அதன் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டுப் புதிய முயற்சியை எடுத்துள்ளது. ரேமண்ட் நிறுவனம் லைப்ஸ்டைல் தாண்டி ரியல் எஸ்டேட் மற்றும் இன்ஜினியரிங் துறையில் சிறிய அளவில் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் ரேமண்ட் பெரும் ரிஸ்க் எடுத்து பெரிய ஜப் அடிக்க முடிவு செய்து Maini Precision Products Limited என்றும் நிறுவனத்தில் சுமார் 682 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்து 59.25 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது.

எதற்காக இந்தத் திடீர் முதலீடு..? இந்த முதலீட்டின் மூலம் ரேமண்ட் குழுமம் என்ன செய்ய உள்ளது..? மைனி பிரிசிஷன் ப்ராடெக்ட்ஸ் நிறுவனத்தின் 59.25 சதவீத பங்குகளைக் கைப்பற்றியதன் மூலம் நிர்வாகத்தை மொத்தமாகக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் ரேமண்ட் குழுமம் ஏரோஸ்பேஸ், பாதுகாப்புத் துறை மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரிப்பாகங்கள் வணிகத்தில் நுழைவதாக அறிவித்ததுள்ளது.
மைனி பிரிசிஷன் ப்ராடெக்ட்ஸ் நிறுவனத்தின் 59.25 சதவீத பங்குகளைக் கைப்பற்றல் நடப்பு நிதியாண்டுக்குள் முடிவடையும் என்று ரேமண்ட் எதிர்பார்க்கிறது எனப் பங்குச் சந்தையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கான தொகையைக் கடன் மற்றும் உள் வருவாய் கலவையாக நிதி திரட்டப்பட உள்ளதாகவும் இவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
மைனி பிரிசிஷன் ப்ராடெக்ட்ஸ் நிறுவனப் பங்குகளைக் கையகப்படுத்தல் மூலம் ரேமண்ட் குழுமத்தின் சொந்த பொறியியல் வணிகத்தை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கிறது. இந்த ஒருங்கிணைந்த வணிகத்தின் மூலம் உலகளாவிய சிறந்த OEM மற்றும் முதல் தர உற்பத்தியாளர்களாக உயர இலக்கு நிர்ணயம் செய்துள்ளது ரேமண்ட் குரூப்.
ரேமண்ட் குழுமம் ஏரோஸ்பேஸ், பாதுகாப்புத் துறை, எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மற்றும் தொழில்துறை வர்த்தகங்களுக்குத் தேவையான உதிரிபாகங்களைச் சர்வதேச தரத்தில் வழங்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தக் கையகப்படுத்துதலின் மூலம் மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் ரூ.400-500 கோடிக்கு மேல் EBITDA பெறவும் திட்டமிட்டு உள்ளது ரேமண்ட்.


Click it and Unblock the Notifications