ரேமண்ட் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கவுதம் சிங்கானியா தனது மனைவி நவாஸ் மோடி சிங்கானியா உடன் பிரிந்துவிட்டதாகத் திங்கள்கிழமை தனது டிவிட்டர் பக்கத்தில் மிகவும் வருத்தத்துடன் அறிவித்தார். திருமணமாகி 32 ஆண்டுகள் ஆன இந்தத் தம்பதிக்கு நிஹாரிகா மற்றும் நிசா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
"கடந்த தீபாவளி போல் இந்தத் தீபாவளி இருக்காது" என்று கௌதம் சிங்கானியா X எனப்படும் டிவிட்டரில் பதிவிட்டு இந்தியத் தொழிற்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். சில நாட்கள் முன்பு தான் ரேமண்ட் குழுமத்தின் தலைவரும் கவுதம் சிங்கானியா மிகப்பெரிய வர்த்தக விரிவாக்கத் திட்டத்தைக் கையில் எடுத்தார்.

Raymond குரூப் லைப்ஸ்டைல் துறையில் அசத்தி வந்தாலும் அதன் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு புதிய முயற்சியை எடுத்துள்ளது. ரேமண்ட் குழுமம் பெரும் ரிஸ்க் எடுத்து Maini Precision Products Limited என்றும் நிறுவனத்தில் சுமார் 682 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்து 59.25 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது.
இந்த முதலீட்டின் மூலம் ரேமண்ட் குழுமம் ஏரோஸ்பேஸ், பாதுகாப்புத் துறை மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரிப்பாகங்கள் வணிகத்தில் நுழைவதாக அறிவித்துள்ளது. ரேமண்ட் நிறுவனம் லைப்ஸ்டைல் தாண்டி ரியல் எஸ்டேட் மற்றும் இன்ஜினியரிங் துறையில் சிறிய அளவில் இயங்கி வந்தாலும் இது புதிய முயற்சியாகப் பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் கவுதம் சிங்கானியா தனது மனைவி நவாஸ் மோடி சிங்கானி திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாகலும், இருவரும் தனித்தனி பாதையில் செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார் கவுதம் சிங்கானியா. மேலும் விவாகரத்துக்கு விண்ணப்பிப்பது குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்காத நிலையில் 32 வருட திருமண வாழ்க்கையில் தானும் நவாஸ் மோடி சிங்கானியாவும் எப்பொழுதும் ஒருவருக்கொருவர் பலமாக இருந்து வருகிறோம் என்று கூறினார்.
நானும் நவாஸும் இப்போதிருந்து வெவ்வேறு பாதைகளைத் தொடர்ந்தாலும், எங்கள் இரண்டு விலைமதிப்பற்ற வைரங்களான நிஹாரிகா மற்றும் நிசா ஆகியோரின் வாழ்க்கைக்குச் சிறந்ததை நாங்கள் தொடர்ந்து செய்வோம் என்று ரேமண்ட் தலைவர் கவுதம் சிங்கானியா தெரிவித்தார். இவருடைய மனைவி நவாஸ் மோடி சிங்கானியா ஒரு பிட்னஸ் கோச் ஆக உள்ளார்.

கவுதம் சிங்கானியா மற்றும் நவாஸ் மோடி சிங்கானியா பிரிவுக்குக் காரணமாகக் கவுதம் அவர்களைச் சுற்றி இருந்தவர்களும், சார்ந்தவர்களும், விரும்பாதவர்களும் பரப்பிய வதந்தி, கிசுகிசு-க்கள் ஆகியவற்றின் எதிரொலியாகத் தாங்கள் பிரிவதாகவும் கூறியுள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications