மும்பை: இந்தியாவில் தற்போது ஐபிஓ சந்தை மிகவும் உயிர்ப்புடன் இருந்தாலும் SME நிறுவனங்களின் ஐபிஓ மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் ஐபிஓ சந்தையின் மேஜிக்-ஐ பயன்படுத்திக்கொள்ளப் பல முன்னணி நிறுவனங்கள் முயற்சி செய்து வரும் வேளையில் கிட்டத்தட்ட 100 ஆண்டு பழமையான தொழில் சாம்ராஜ்ஜியமான ரேமண்ட், 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தனது ஆடை மற்றும் ரியல் எஸ்டேட் பிரிவுகளைப் பங்குச்சந்தையில் பட்டியலிடத் திட்டமிட்டுள்ளது, இதன் மூலம் நிறுவனர்கள் பங்குதாரர்களின் மதிப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
ரேமண்ட் குழுமத்தின் தலைவரான கௌதம் சிங்கானியா குடும்ப பிரச்சனையில் மாட்டிக்கொண்டு நிர்வாகத்தில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் வேளையில் இந்த ஐபிஓ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கௌதம் சிங்கானியா மற்றும் அவருடைய மனைவி நவாஸ் மோடி மத்தியிலான விவாகரத்து பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், ரேமண்ட் குழுமத்தின் அதிகாரத்தை கௌதம் தக்கவைத்துள்ளார்.

ரேமண்ட் குழுமம் தற்போது இன்ஜினியரிங், விண்வெளி முதல் ஃபேஷன் மற்றும் ரியல் எஸ்டேட் வரையிலான பல துறைகளில் வணிகம் செய்து வருகிறது. கடந்த சில வருடத்தில் பல துறையில் நிறுவனங்களையும், வர்த்தகத்தையும் கைப்பற்றப்பட்டது, லைப்ஸ்டைல் மற்றும் டெக்ஸ்டைல் துறையில் மட்டுமே தனது வர்த்தக கட்டமைப்பை மீட்டு கொண்டு வருவதற்கு உதவியது.
ரேமண்ட் லைஃப்ஸ்டைல் லிமிடெட் இந்த வாரம் வியாழக்கிழமை மும்பையில் வர்த்தகம் தொடங்கியதும், ரியல் எஸ்டேட் பிரிவு 2025 இல் பட்டியல்படுத்த தயாராகும், இதன் மூலம் அடுத்த ஆண்டு ரேமண்ட் குழுமத்தின் மூன்று நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும் என ரேமண்ட் குழும தலைவர் கௌதம் ஹரி சிங்கானியா தெரிவித்தார்.
இந்த மறுசீரமைப்பின் முக்கியமான நோக்கம், ரேமண்ட் குழுமம் தற்போது கன்சோலிடேட்டட் கட்டமைப்பாக உள்ளது. இதை மொத்தமாகத் தகர்த்து தனித்தனியாகப் பட்டியலிடப்படும் போது இதன் வணிகங்களுக்குச் சரியான மதிப்பீடு கிடைப்பது மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களுக்கும் அதிகப்படியான முதலீட்டு லாபத்தை அளிக்க முடியும் என்று அவர் கூறினார்.
ரேமண்ட் குழுமத்தின் தாய் நிறுவனம் இன்ஜினியரிங் மற்றும் ஆட்டோ உதிரிப்பாகங்கள் பிரிவைத் தக்கவைத்துக் கொள்ளும். இந்த வாரம் நடக்கும் ரேமண்ட் லைஃப்ஸ்டைல் பட்டியலிடுவதன் மூலம் ரேமண்ட் லிமிடெட்டில் பங்குகளை வைத்திருக்கும் ஒவ்வொரும் 5 பங்குகளுக்கு, 4 ரேமண்ட் லைஃப்ஸ்டைல் பங்குகளைப் பெறுவார்கள்.
ரேமண்ட் லைஃப்ஸ்டைல் பட்டியலிடுவதன் வாயிலாக இன்று ரேமண்ட் பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் 9 சதவீதம் வரையில் அதிகரித்து, வர்த்தகம் முடியும் போது 5 சதவீத உயர்வுடன் முடிந்தது. இந்த ஆண்டு 89% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications