ரேமண்ட் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கௌதம் சிங்கானியா தனது மனைவி நவாஸ் மோடியை விவாகரத்துச் செய்ய முடிவு செய்துள்ளார். நவாஸ் மோடி, கௌதம் சிங்கானியாவின் மொத்த சொத்தில் சுமார் 75 சதவீதத்தைக் கேட்ட நிலையில் ரேமண்ட் சாம்ராஜ்ஜியம் உடையும் அபாயம் உருவாகியுள்ளது.
இதேவேளையில் அவர்களது விவாகரத்தைச் சுற்றியும், நவாஸ் மோடி கேட்கும் ஜீவனாம்சம் சார்ந்த விஷயங்கள் குறித்தும் புதிய விவாதம் கிளம்பியுள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரையில் திருமணம், விவாகரத்து ஆகியவை திருமணச் சட்டத்தின் கீழ் தான் செயல்படும். இப்படி இந்தியாவில் இரு திருமணச் சட்டங்கள் உள்ளது.

இந்தியாவில் இந்து திருமணச் சட்டம் மற்றும் சிறப்புத் திருமணச் சட்டம் என்று இரு வகை உள்ளது. இதில் இந்து திருமணச் சட்டம் என்பது திருமணம் செய்துகொண்டோர் இருவரும் இந்து மதத்தைச் சார்ந்தவர் எனில் இது பொருந்தும். இதுவே மற்ற மதத்தினர் எனில் சிறப்புத் திருமணச் சட்டம் பொருந்தும்.
கௌதம் சிங்கானியா ஒரு இந்து, நவாஸ் மோடி ஒரு பார்சி இவர்கள் இருவரும் 1999ஆம் ஆண்டு சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்துகொண்டதால், ஜீவனாம்ச உரிமைகள் குறித்து இரு சட்ட விதிமுறையின் கீழ் மாறுபடுகிறது. இதனால் கௌதம் சிங்கானியா, நவாஸ் மோடி தரப்பில் தீவிர சட்ட ஆலோசனையை நாடி வருகின்றனர்.
கௌதம் சிங்கானியா, நவாஸ் மோடி ஆகியோர் திருமணம் 1954 சிறப்புத் திருமணச் சட்ட விதிகளின் கீழ் நடந்துள்ளது. இதனால் இந்து திருமணச் சட்டத்தின் படி கணவரின் 50 சதவீத சொத்துக்களை விவாகரத்துக்குப் பின்பு மனைவி பெறும் விதிமுறை பொருந்தாது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட திருமணத்தில் அலிமோனி ஒவ்வொரு வழக்கிலும் கணவன் - மனைவி நிதி நிலை பொறுத்து மாறுபடும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து கௌதம் சிங்கானியா, நவாஸ் மோடி எவ்விதமான விளக்கமும் இதுவரையில் அறிவிக்கவில்லை.
கௌதம் சிங்கானியா-வின் தந்தை விஜய்பத் சிங்கானியா சமீபத்தில் கொடுத்த பேட்டியில் நவாஸ் மோடிக்கு ஆதரவாக, இந்து திருமணச் சட்டம், 1955-ன் கீழ் தனது கணவரின் செல்வத்தில் பாதியைப் பெற அவர் தகுதியானவர் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
நவாஸ் மோடி தனக்கும் தனது இரு பிள்ளைகளான நிஹாரிகா மற்றும் நிசா ஆகியோரின் பாதுகாப்பான எதிர்காலத்திற்கு 32 வருட திருமணம் விவாகரத்தில் முடிந்ததையடுத்து தனது கணவர் கௌதம் சிங்கானியாவின் மொத்த சொத்தில் சுமார் 75 சதவீதத்தைக் கேட்டார்.
75 சதவீத சொத்துக்களை டிரஸ்ட் அமைப்பின் வாயிலாக இணைந்து அளிப்பதாகக் கௌதம் சிங்கானியா உறுதி அளித்தாலும், நவாஸ் மோடி தரப்பில் இதை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் ரேமண்ட் குடும்பச் சொத்தில் இருந்து நிர்வாகக் குழு வரையில் உரிமை மாறுபடும் நிலை உருவாகியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications