ரோட்டுக்கு வந்த கெளதம் சிங்கானியா மனைவி.. இரவில் நடந்தது என்ன..?!! - வீடியோ

ரேமண்ட் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கெளதம் சிங்கானியா தனது மனைவி நவாஸ் மோடி சிங்கானியாவுடனான 32 வருட திருமண வாழ்க்கையை முறித்துக்கொண்டதாக திங்கள்கிழமை டிவிட்டரில் வெளிப்படையாக தெரிவித்தார்

இந்த பதிவில் கெளதம் சிங்கானியா, நவாஸ் மோடி சிங்கானியாவை பிரிந்துவிட்டதாக அறிவித்தது மட்டும் அல்லாமல் தனது பிள்ளைகள் இருவருக்கும் தேவையானவற்றை சிறந்த முறையில் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.கெளதம் சிங்கானியா-வின் பதிவு தொழிற்துறையினர் மத்தியில் பெரும் விமர்சனத்தை பெற்றது.

ரோட்டுக்கு வந்த கெளதம் சிங்கானியா மனைவி.. இரவில் நடந்தது என்ன..?!! - வீடியோ

இந்த நிலையில் நவாஸ் மோடி சிங்கானியா, கெளதம் சிங்கானியா ஏற்பாடு செய்திருந்த தீபாவளி விருந்தில் கலந்துகொள்வதற்காக தானேயில் உள்ள அவர்களது சொந்த வீட்டுக்கு நவாஸ் மோடி சென்ற போது உள்ளே நுழையவிடாமல் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் இன்று காலை முதல் செம டிரெண்டாகி வருகிறது.

பிட்னஸ் டிரைனர் மற்றும் எழுத்தாளரும் 53 வயதான நவாஸ் மோடி சிங்கானியா கெளதம் சிங்கானியா குடும்பத்திற்கு சொந்தமான ஜே.கே.கிராம் வீட்டின் நுழைவாயிலிலேயே செக்யூரிட்டியால் தடுத்து நிறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினார்.

இந்த தீபாவளி பண்டிகை விருந்துக்கு நவாஸ் மோடி சிங்கானியா அழைக்கப்பட்ட வேளையிலும் ஜே.கே.கிராம் வீட்டின் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார். ஜே.கே.கிராம் வீட்டின் செக்யூரிட்டி மூத்த அதிகாரியான சந்திரகாந்த் தான் நவாஸ் மோடி -ஐ தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது.

இந்த பிரச்சனையில் கடுப்பான நவாஸ் மோடி சிங்கானியா வீட்டின் முன்பு தரையில் உட்கார்ந்துவிட்டார், பிரபல வழக்கறிஞர் மகளான நவாஸ் மோடி சட்டம் படித்தவர், ஜிம் நடத்தி வருகிறார். 1999 ஆம் ஆண்டு கெளதம் சிங்கானியா-வை திருமணம் செய்துக்கொள்ளும் முன்பு 8 வருடம் டேட்டிங் செய்தது மூலம் சுமார் 32 வருடம் ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.

இதேவேளையில் கெளதம் சிங்கானியா தனது மனைவி நவாஸ் மோடி சிங்கானியாவுடனான 32 வருட திருமண வாழ்க்கையை முறித்துக்கொண்டதாக திங்கள்கிழமை டிவிட்டரில் வெளிப்படையாக தெரிவித்த பின்பு, நவாஸ் மோடி தனது மாமியார் உடன் தீபாவளி சிறப்பு பூஜை மேற்கொண்ட போட்டோ, வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+