கலிபோர்னியாவில் 1983-ல் நிறுவப்பட்ட சிலிக்கான் வேலி பேங்க், சிலிக்கான் வேலி பகுதியில் இருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு சேவை அளித்து வருகிறது.
Recommended Video
அமெரிக்க ஸ்டார்ட்அப் சந்தையில் உருவான Funding Winter மூலம் இவ்வங்கியில் பணம் வைத்திருந்த பெரும்பாலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பணத்தை திரும்ப பெற்று பயன்படுத்த துவங்கிய நிலையில், பணத்தை அளிக்க தனது சொத்த சொத்துகளை விற்பனை செய்தும், பத்திரங்களை நஷ்டத்திற்கும் விற்பனை செய்து பணத்தை கொடுத்த நிலையில் தற்போது திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் Silicon Valley Bank-ஐ வாங்க எலான் மஸ்க் தயார் என டிவிட்டரில் பதில் அளித்துள்ளார்.
RAZER சிஇஓ Min-Liang Tan
சிலிக்கான் வேலி பேங்க் திவாலான நிலையில் RAZER லேப்டாப் தயாரிக்கும் நிறுவனத்தின் சிஇஓ Min-Liang Tan டிவிட்டர் தளத்தில், தற்போது டிவிட்டர் நிறுவனம் சிலிக்கான் வேலி பேங்க்-ஐ வாங்கி டிஜிட்டல் வங்கியாக மாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
எலான் மஸ்க்
இந்த ட்வீட் வெளியான அடுத்த சில நிமிடத்திலேயே எலான் மஸ்க் Min-Liang Tan டிவிட்-க்கு நான் இந்த ஐடியாவை ஏற்க தயார் என அறிவித்துள்ளார். டிவிட்டர் மூலம் எலான் மஸ்க் அதிகப்பட்சமாக சாதிக்க நினைப்பது சர்வதேச அளவில் பேமெண்ட் சேவையை கொண்டு வருவதை தான்.
டெபாசிட் இன்சூரன்ஸ்
சிலிக்கான் வேலி பேங்க் திவாலான நிலையில் பல நூறு ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பல பில்லியன் டாலர் நிதி இவ்வங்கியில் மாட்டிக்கொண்டு உள்ளது. தற்போது Federal Deposit Insurance Corporation (FDIC) கைப்பற்றிய நிலையில் டெபாசிட் இன்சூரன்ஸ் தொகையாக 250000 டாலர் மட்டுமே கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
புதிய பார்ட்னர்
இதேவேளையில் சிலிக்கான் வேலி பேங்க்-ன் தலைவர் Greg Becker வெளியிட்ட வீடியோ மெசேஜ் மூலம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய செய்தியில் தான் சந்தை கட்டுப்பாட்டாளர்கள் உடன் பணியாற்றி வருவதாகவும், இதேவேளையில் புதிய பார்ட்னர்-ஐ தேடி வருவதாக தெரிவித்தார். ஆனால் இந்த முயற்சி வெற்றி அடையுமா என்பது தெரியாது என அறிவித்தார்.
SVB தலைவர் Greg Becker
சிலிக்கான் வேலி பேங்க்-ன் தலைவர் Greg Becker புதிய பார்ட்னர்-ஐ தேடி வருவதாக தெரிவித்த செய்தி வெளியான பின்பு தான் RAZER நிறுவனத்தின் சிஇஓ Min-Liang Tan டிவிட்டர் தளத்தில், தற்போது டிவிட்டர் நிறுவனம் சிலிக்கான் வேலி பேங்க்-ஐ வாங்கி டிஜிட்டல் வங்கியாக மாற்ற வேண்டும் என ட்வீட் செய்துள்ளார். எலான் மஸ்க் இந்த வங்கியை வாங்க வேண்டுமா..? உங்க பதில் என்ன..? கமெண்ட் பண்ணுங்க.
Greg Becker பங்கு விற்பனை
சிலிக்கான் வேலி பேங்க்-ன் தலைவர் Greg Becker இவ்வங்கியின் நிலையை உணர்ந்து தான் பிப்ரவரி 27 ஆம் தேதி ஹோல்டிங் நிறுவனத்தின் 12,451 பங்குகளை 3.6 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்துள்ளார். கடந்த சில வருடத்தில் Greg Becker-ன் பங்கு விற்பனை இதுதான் முதல் முறை.
212 பில்லியன் டாலர்
அமெரிக்க ஸ்டார்ட்அப் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் Silicon Valley Bank டிசம்பர் 31 நிலவரப்படி, சிலிக்கான் வேலி பேங்க் சுமார் 212 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களைக் கொண்டுள்ளது, இவ்வங்கியின் முக்கியமான வாடிக்கையாளர்களில் Shopify, Pinterest போன்ற பெரிய பிராண்டுகளும் அடங்கும்.
உபரி நிதி, வர்த்தக கணக்குகளை
இந்த முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தனது உபரி நிதி, வர்த்தக கணக்குகளை சிலிக்கான் வேலி பேங்க்-ல் வைத்துள்ளது. இது மட்டும் அல்லாமல் அமெரிக்க ஸ்டார்ட்அப் சந்தையை சேர்ந்த அதிக சொத்து மதிப்புள்ள பணக்காரர்களுக்கு தனியார் வங்கி சேவைகளை வழங்குவதோடு, வென்சர் கேப்பிடல், தனியார் பங்கு நிறுவனங்களுக்கு பல சேவைகளை வழங்குகிறது.
சிலிக்கான் வேலி பேங்க் திவால்
சிலிக்கான் வேலி பேங்க் திவாலானது மூலம் அமெரிக்க தொழிலதிபர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளையில் பல முன்னணி நிறுவனங்களும், தொழிலதிபர்களும் இவ்வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளனர்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications