பெங்களூரு பின்டெக் நிறுவனமான வழங்கும் ரேசர்பே தனது 10 ஆண்டு கால பயணத்தை கொண்டாடும் வகையில் அனைத்து ஊழியர்களுக்கும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள எம்ப்ளாயீ ஸ்டாக் ஓனர்ஷிப் பிளானை வழங்கவுள்ளது. ESOP திட்டம் ஊழியர்களின் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நிறுவனங்கள் வழங்கும் திட்டமாகும். அதாவது ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் தங்களுடைய நிறுவனத்தின் பங்குகளை குறைந்த விலையிலோ அல்லது குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இலவசமாகவோ வாங்குவதற்காக வழங்கப்படும் திட்டம் தான் இந்த ESOP.
ESOP மூலம் பணியில் இருக்கும் போதே பணியாளர்கள் தங்கள் நிறுவனத்தில் உரிமையுடையவர்களாக இருக்க முடியும். இதுபோன்ற திட்டங்கள் பெருவாரியான நிறுவனங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது பெங்களூரைத் தளமாகக் கொண்ட இந்த ரேசர் பே நிறுவனத்தில் 3000-த்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். எனவே ரூ.30 கோடிக்கும் மேல் தற்போது ESOP வழங்கப்படவுள்ளது. அதாவது ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பங்குகள் வழங்கப்படவுள்ளது. இந்த பங்குகளை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு குறிப்பிட்ட விலையில் விற்பனை செய்து பணமாக்கிக் கொள்ளலாம்.

ரேசர் பே நிறுவனம் தற்போது அமெரிக்காவிலிருந்து தனது தலைமையிடத்தை இந்தியாவிற்கு மாற்றும் செயல்முறையில் ஈடுபட்டு வருகிறது. 2025-ஆம் ஆண்டுக்குள் இந்நிறுவனம் தன் தலைமையிடத்தை வெற்றிகரமாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் 2027 மற்றும் 2028-ஆம் ஆண்டுகளுக்குள் பங்குச்சந்தையிலும் பட்டியலிடத் திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொரு ஊழியரும் நிறுவனத்தின் வெற்றியில் பங்களிக்க வேண்டும் என்பதற்காக இந்த இஎஸ்ஓபி முன்முயற்சியை தொடங்கியுள்ளதாக ரேசர்பே நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹர்ஷில் மாத்தூர் கூறியுள்ளார். அனைத்து ஊழியர்களுக்கும் இஎஸ்ஓபி-களை வழங்குவதன் முயற்சி நீண்ட கால சிந்தனை மற்றும் மதிப்பை உருவாக்குவதற்காக எங்களின் அர்ப்பணிப்பை காட்டுகிறது. மேலும் எங்கள் குழுவின் கடின உழைப்பை அங்கீகரிக்கவும், ரிவார்டுகளை வழங்கவும் எங்களை ஊக்குவிக்கிறது என்று ரேசர் பேவின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனரான ஷஷாங்க் குமார் கூறியுள்ளார்.
ரேசர் பே நிறுவனம் ஊழியர்களின் நலனில் அக்கறை வைத்து அவர்களுடைய முயற்சியை அங்கீகரிக்கும் வகையில் தற்போது இந்த இஎஸ்ஓபி திட்டத்தை அறிவித்திருப்பது பலரின் பாராட்டை பெற்றுள்ளது. குறிப்பாக நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு பணி புரியும் ஊழியர்களை அவ்வப்போது இதுபோன்ற பரிசுகளை வழங்கி பாராட்டுவது அவர்களின் உந்துதலை அதிகரித்து நிறுவன வெற்றிக்கு பெரிதும் உதவும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications