இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் முக்கியமான துறைகளில் ஒன்று பன்டெக், இத்துறையில் ஏற்கனவே பல துறைகள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருந்தாலும் பல புதிய நிறுவனங்களுக்குத் தொடர்ந்து வர்த்தக வாய்ப்புகள் இருந்துக் கொண்டு தான் இருக்கிறது.
டிஜிட்டல் மயம்
இந்தியாவில் தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நிலையில் பின்டெக் துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு அதிகப்படியான வர்த்தகம் கிடைத்து வருவது மட்டும் அல்லாமல் வளர்ச்சி வாய்ப்புகளும் சிறப்பாக உள்ளது.
ரேசர்பே நிறுவனம்
இந்தச் சாதகமான சூழ்நிலையில் புதிதாக முதலீட்டை ஈர்த்த ரேசர்பே நிறுவனத்தின் மதிப்பு குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. பிக்டெக் துறையில் யூனிகார்ன் அந்தஸ்தைப் பெற்ற ரேசர்பே சமீபத்தில் சீரிஸ் F முதலீட்டுச் சுற்றில் சுமார் 375 மில்லியன் டாலர் முதலீட்டை 7.5 பில்லியன் டாலர் நிறுவன மதிப்பீட்டில் திரட்டியுள்ளது.
7.5 மடங்கு வளர்ச்சி
ரேசர் பே நிறுவனத்தின் சந்தை மதிப்பு கடந்த 15 மாதத்தில் சுமார் 7.5 மடங்கு வளர்ச்சி அடைந்து 2வது இடத்தில் இருந்த வால்மார்ட் நிறுவனத்தின் போன்பே நிறுவனத்தை 3வது இடத்திற்குத் தள்ளி ரேசர்பே 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
முதலீட்டாளர்கள்
ரேசர்பே இந்த முதலீட்டுச் சுற்றில் லோன் பைன் கேபிட்டல், அல்கியான் கேப்பிடல், TCV ஆகிய நிறுவனங்கள் புதிதாகவும், ஏற்கனவே முதலீட்டாளராக இருந்த டைகர் குளோபல், சிகோயா கேபிடல் இந்தியா, ஜிஐசி மற்றும் Y காம்பினேட்டர் ஆகிய நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளது.
சேவை விரிவாக்கம்
இந்நிலையில் ரேசர்பே தனது பிஸ்னஸ் பேங்கிங் தளமான ரேசர்பேஎக்ஸ் மற்றும் பேங்கிங் சேவைகளைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வருகிறது. இதுமட்டும் அல்லாமல் 2022 முதல் சேவை தளம் மற்றும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை விரிவாக்கம் செய்யப் புதிய நிறுவனங்களை மொத்தமாகக் கைப்பற்றவும் திட்டமிட்டு வருகிறது.
நிறுவன கைப்பற்றல்
இதோடு ரேசர்பே தனது வர்த்தகத்தை இந்தியாவைத் தாண்டி தென் ஆசிய நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு அதற்கான பணிகளில் இறங்கியுள்ளது. இந்தியாவிலும் தென் ஆசியாவிலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்காக 600 ஊழியர்களைப் புதிதாகப் பணியில் அமர்த்த திட்டமிட்டு வருகிறது ரேசர்பே.


Click it and Unblock the Notifications