இந்திய அரசு வெளியிட்ட அதிக மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டு ஆர்பிஐ திரும்ப பெறும் அறிவிப்புக்கு பின்பு மக்கள் எவ்விதமான தள்ளுமுள்ளும் இல்லாமல் வங்கிகளில் மக்கள் டெபாசிட் செய்ய துவங்கினர். ஆர்பிஐ செப்டம்பர் 30 ஆம் தேதி கடைசி நாளாக அறிவித்த நிலையில் தற்போது எவ்வளவு பணம் திரும்ப வந்துள்ளது தெரியுமா
இந்திய பண புழக்க சந்தையில் உள்ள ரூ.2,000 நோட்டுகளில் சுமார் 76 சதவீதம் வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டின் பெரும் பகுதி இந்திய வங்கி அமைப்பிற்குள் வந்துள்ளது மூலம் அதிகாரப்பூர்வமாக 2000 ரூபா நோட்டு சகாப்தம் முடிந்தது என கூறலாம்.

இந்திய ரிசர்வ் வங்கி மே 19 அன்று மாலையில் புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இதோடு மக்கள் தங்கள் கையில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யவோ அல்லது வங்கிகளிள் பிற ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளவோ அறிவுறுத்தி, செப்டம்பர் 30 வரை அவகாசம் அளித்தது.
ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் வங்கிகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, மே 19ஆம் தேதி அறிவிப்புக்குப் பிறகு ஜூன் 30, 2023 வரை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட ரூ.2,000 நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.2.72 லட்சம் கோடி.
இதன் மூலம் ஜூன் 30 ஆம் தேதி வர்த்தக நேரம் முடிவடையும் போது புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளின் மொத்த மதிப்பு 84,000 கோடி ரூபாய் மட்டுமே என ஆர்பிஐ தனது அறிக்கையில் தெரிவித்தள்ளது. இதன் வாயிலாக புழக்கத்தில் இருந்த ரூ.2,000 ரூபாய் நோட்டுகளில் 76 சதவீதம் திரும்பி வந்துள்ளது.
இந்தியாவின் முக்கிய வங்கிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளில், சுமார் 87 சதவீதம் டெபாசிட்களாகவும், மீதமுள்ள 13 சதவீதம் பிற ரூபாய் நோட்டுகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications