இந்திய ரிசர்வ் வங்கி 18 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு வங்கிகளுக்கு இந்தியாவில் Vostro கணக்குகளை திறக்க ஒப்புதல் அளித்துள்ளது, இதன் மூலம் இந்திய இறக்குமதியாளர்கள் டாலர், யூரோ போன்ற நாணயங்கள் அல்லாமல் இந்திய ரூபாயிலேயே வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு பேமெண்ட் செய்ய முடியும்.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு வெளிநாட்டு பேமெண்ட்-களை ரூபாயில் செலுத்தும் கட்டமைப்பை உருவாக்க உள்ளதாக அறிவித்தது.
இதனை தொடர்ந்து தற்போது போட்ஸ்வானா, பிஜி, ஜெர்மனி, கயானா, இஸ்ரேல், கென்யா, மலேசியா, மொரீஷியஸ், மியான்மர், நியூசிலாந்து, ஓமன், ரஷ்யா, சீஷெல்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தான்சானியா, உகாண்டா மற்றும் இங்கிலாந்து ஆகிய 18 நாடுகளின் வங்கிகளுக்கு இந்தியாவில் வோஸ்ட்ரோ கணக்குகளைத் திறக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி இதுவரையில் இந்தியாவில் வோஸ்ட்ரோ கணக்குகளைத் திறக்க 18 நாடுகளை சார்ந்து சுமார் 60 ஒப்புதல்களை வெளிநாட்டு வங்கிகளுக்கு அளித்துள்ளது என செவ்வாய்க்கிழமை மத்திய நிதிதுறையை சேர்ந்த மாநில அமைச்சர் பகவத் கார்ட் நாடாளுமன்றத்தில் விளக்கம் கொடுத்தார்.
உக்ரைன் - ரஷ்யா போர்
பிப்ரவரி 2022ல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு பெரிய பாதிப்பை எதிர்கொண்டது மட்டும் அல்லாமல் அதிகளவிலான பாதிப்பை வர்த்தக சந்தை, பொருளாதாரம், விலைவாசியிலும் எதிர்கொண்டது. இந்த நிலையில் இந்திய ரூபாய் அடைப்படையிலான பேமெண்ட் முறையை கொண்டு வந்தது.
ரூபாய்க்கான டிமாண்ட்
இந்த கட்டமைப்பு மூலம் குளோபல் டிரேட்-க்கு ஊக்கம் அளிப்பது மட்டும் அல்லாமல் உலகளவில் ரூபாய்க்கான டிமாண்ட் அதிகரிக்கும். இதன் மூலம் ரூபாய் மதிப்பு சர்வதேச சந்தையில் உயரும். இந்திய ரூபாய் அடைப்படையிலான பேமெண்ட் முறையின் கீழ் அனைத்து ஏற்றுமதி, இறக்குமதியின் பில்-களை ரூபாய் அடிப்படையிலேயே செய்ய முடியும்.
உதாரணம்
உதாரணமாக சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் பட்சத்தில் இரு நாடுகளின் நாணய மதிப்பீட்டில் ரூபாய் மதிப்பை கணக்கிட்டு பில் செய்ய வேண்டும். இதற்கு இறக்குமதியாளர்கள் ரூபாய் வடிவிலேயே பேமெண்ட் செய்வார்கள்.
Vostro கணக்கு
இதை செயல்படுத்த தான் வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவில் Special Rupee Vostro accounts திறக்க வேண்டும். இதற்கு தான் ஆர்பிஐ 18 நாடுகளை சேர்ந்த வங்கிகளுக்கு சுமார் 60 ஒப்புதல்களை அளித்துள்ளது, இதன் மூலம் இனி வெளிநாட்டு வர்த்தகத்திற்கு டாலருக்கு ரூபாயை மாற்ற தேவையில்லை, இதற்காக எக்ஸ்சேஞ்ச் கட்டணமும் செலுத்த தேவையில்லை.
20 ரஷ்ய வங்கிகள்
பிப்ரவரி மாதம் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் Rosbank, Tinkoff Bank, Centro Credit Bank மற்றும் Credit Bank of Moscow உட்பட 20 ரஷ்ய வங்கிகள் இந்தியாவில் Vostro கணக்குகளை திறந்துள்ளதாக அறிவித்துள்ளது. இதேவேளையில் பிப்ரவரி மாதம் ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த கச்சா எண்ணெய் வரலாற்று உச்சத்தை தொட்டது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications