ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், 2024-25 நிதியாண்டிற்கான முதல் இருமாத நாணய கொள்கை குழு கூட்டத்தில், யூபிஐ ஆப் பயன்படுத்தி கேஷ் டெபாசிட் மெஷின்களில் (CDMs) பணத்தை டெபாசிட் செய்வதற்கு அனுமதி வழங்க RBI முன்மொழிந்துள்ளதாக அறிவித்தார்.
இதற்கு முன்பு கேஷ் டெபாசிட் மெஷின்களில் பணமாகவோ அல்லது டெபிட் கார்டு கொண்டு பணம் டெபாசிட் செய்யப்பட்ட நிலையில், தற்போது யூபிஐ வாயிலாக டெபாசிட் செய்யும் புதிய சேவையை கொண்டு வந்து மக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது ஆர்பிஐ.

இன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கி நாணய கொள்கை குழு (MPC) கூட்டத்தில் ரெப்போ விகிதம் குறித்து முடிவுகளுக்கு பின்பு பொது மக்களிடம் பேசிய கவர்னர் சக்திகாந்த தாஸ், "கேஷ் டெபாசிட் மெஷின் (CDMs) வழியாக பணம் செலுத்துவது என்பது பெரும்பாலும் டெபிட் கார்டுகள் மூலமாகவே செய்யப்படுகிறது. ஏடிஎம்-களில் யூபிஐ மூலம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் அனுபவத்தை கருத்தில் கொண்டு, இப்போது யூபிஐ பயன்படுத்தி CDMs இல் ரொக்க பணத்தை டெபாசிட் செய்வதை எளிதாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
இது வாடிக்கையாளர் பண பரிமாற்ற வசதியை மேம்படுத்துவதுடன், வங்கிகளில் பணம் கையாளும் செயல்முறையை மேலும் திறனுடையதாக மாற்றும் என்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.
தற்போது, ரொக்க டெபாசிட் மெஷின் (CDMs) வழியாக பணம் செலுத்துவதற்கு வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட டெபிட் கார்டு தேவைப்படுகிறது. இதன் மூலம் பணம் செலுத்துவது சற்று சிக்கலானதாக இருக்கும்.
கார்டை எடுத்துச் செல்வது, பின் எண்-ஐ நினைவில் வைத்திருப்பது போன்றவை சிரமங்களாக இருக்கும். மேலும், கார்டு தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ பணம் இழக்கும் அபாயமும் உள்ளது.
இந்த சிக்கல்களை அடிப்படையில் களையவும், யூபிஐ அளிக்கும் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளவும் இந்த புதிய திட்டம் உதவும். யூபிஐ பயன்பாடு ஏற்கனவே பெரும்பாலானோர் பயன்படுத்தும் வேளையில் இந்த UPI ஆப் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும். இதன் மூலம் பணம் அனுப்புதல், பெறுதல் போன்ற பணிகளை எளிதாக செய்ய முடியும்.
இந்த சேவை மூலம் கேஷ் டெபாசிட் மெஷின்களில் (CDMs) யூபிஐ பின்னை மட்டுமே பயன்படுத்தி பணம் செலுத்த முடியும். இது கார்டு தேவை இல்லாததால், எளிதான மற்றும் விரைவான பணம் செலுத்த முடியும்.
யூபிஐ பின்னை பயன்படுத்துவது என்பது பாதுகாப்பானது. ஏனெனில், யூபிஐ பின்னை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை. மேலும், பல காரணி அங்கீகார முறை (MFA) மூலம் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
அனைத்தையும் விட முக்கியமாக கேஷ் டெபாசிட் மெஷினிலும் ரொக்க பணத்தின் பயன்பாட்டு குறைக்கப்படும் என்பதால் வங்கிகளுக்கும் நிதி ஆதாரங்களை எளிதாக கையாள முடியும். CASH IS KING என்ற நிலை மாறி பல காலம் ஆனாலும், இன்னும் பல இடத்தில் ரொக்க பணத்தின் அதிக்கம் இருக்கத்தான் செய்கிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications