டெல்லி: டிசம்பர் 1 முதல் சில்லறை வர்த்தகத்தில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம் நடத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022 - 23 பட்ஜெட் உரையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கியின் ஆதரவுடன் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம் வெளியீடு குறித்த அறிவிப்பினை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது.
டிசம்பர் 1 முதல்
தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாயும், சில்லறைப் பணப் பரிவர்த்தனைகளுக்காக டிசம்பர் 1ம் தேதி இந்த சோதனை ஓட்டம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குறிப்பிட்ட சில பயன்பாட்டிற்காக சோதனை அடிப்படையில், டிஜிட்டல் ரூபாய் அல்லது இ-ரூபாய் நோட்டுக்களை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
விழிப்புணர்வு
டிஜிட்டல் ரூபாய் நோட்டுக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சோதனை முறையில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட உள்ளது என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இந்த நிலையில் தான் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம் வெளியீடு குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
டிஜிட்டல் ரூபாய் குறியீடு
தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாயும் சில்லறைப் பணப் பரிவர்த்தனைகளுக்காக டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம் வெளியிடப்படவுள்ள நிலையில், டிஜிட்டல் முறையில் e₹-R என்ற குறியீடு டிஜிட்டல் ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளது.
எந்தெந்த வங்கிகள்?
முதல்கட்டமாக டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டத்திற்காக அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த டிஜிட்டல் கரன்சிகள் எஸ்பிஐ, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி உள்ளிட்ட 4 வங்கிகளில் அறிமுகமாகவுள்ளது
இது மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வர் நகரங்களில் டிசம்பர் 1-ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இன்னும் 4 வங்கிகள் இணையலாம்
இதே அகமதாபாத், கவுகாத்தி, இந்தூர், லக்னோ, பாட்னா, சிம்லாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக எஸ்பிஐ, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி உள்ளிட்ட 4 வங்கிகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், அடுத்தகட்டமாக பாங்க் ஆப் பரோடா, யூனியன் பாங்க ஆப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கியிலும் அறிமுகப்படுத்தலாம் என தெரிகிறது.
எவ்வளவு கரன்சிகள்?
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பின் மூலம் டிசம்பர் 1 முதல் 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500, 2000 ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் கரன்சிகள் புழக்கத்திற்கு வரவுள்ளது. முதல் கட்டமாக 4 நகரங்களில் நடைபெறும் சோதனை ஓட்டத்தில், 4 வங்கிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது விரைவில் அடுத்தடுத்த நகரங்களுக்கு விரிவு படுத்தப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications