ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா தொடர்ந்து நடப்பு நிதியாண்டில் நடந்த மத்திய மானட்டரி பாலிசி கூட்டத்தில் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது. இதற்கிடையில் 2024ம் நிதியாண்டிற்கான காலண்டரை அறிவித்துள்ளது.
இந்த காலண்டரில் ஆறு கூட்டத்திற்காக தேதிகள் வெளியாகியுள்ளன. இதில் முதல் கூட்டம் ஏப்ரல் 3 - 6 அன்று நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாவது கூட்டம் ஜூன் மாதத்திலும், ஆகஸ்ட், அக்டோபர், டிசம்பர் மற்றும் பிப்ரவரி 2024-லும் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
முக்கிய முடிவுகள்
ரிசர்வ் வங்கி கவர்னர் தலைமையில் மத்திய வங்கியின் இரண்டு பிரதிநிதிகள் மற்றும் மூன்று வெளி உறுப்பினர்கள் அடங்கிய குழு, மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டங்களில், நிலவும் உள்நாட்டு மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் குறித்து விவாதிக்கப்படும். முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
ரிசர்வ் வங்கியின் இலக்கு
நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 4% ஆகவும், இருபுறமும் 2% மார்ஜினும் இருக்க வேண்டும் என அரசு ஆர்பிஐ-க்கு இலக்கு வைத்துள்ளது. ஆக இது போன்ற இலக்கு மற்றும் சமீபத்திய உலகளாவிய மற்றும் உள்நாட்டுப் பொருளாதார நிலைமையையும், தற்போதைய உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள். அதனால் ஏற்படும் தாக்கம் உட்பட அதனுடன் தொடர்புடைய சவால்களையும் மதிப்பாய்வு செய்கிறது.
முதலீட்டாளர்கள் கவனம்
ஆக இப்படி பல முக்கிய அம்சங்கள் இருக்கும் இந்த கூட்டம் என்பது முதலீட்டாளர்கள் மத்தியில், பெரும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. இது இந்திய பங்கு சந்தைகள் உள்ளிட்ட முதலீடுகள், ரூபாயில் தாக்கத்தினை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது. ஆக இது முதலீட்டாளர்களால் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
சரியான முடிவு
தற்போது சர்வதேச வங்கிகளில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், இது இந்திய வங்கிகளின் நடவடிக்கை குறித்து கண்காணிப்பதும், அவற்றை மறுசீரமைப்பு செய்வதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது. ஆக சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்கும் ஒன்றாக உள்ளது.
மக்கள் கவனம்
ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்தின் அடிப்படையில், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கான வட்டியை மாற்றியமைத்துக் கொள்ளும், ரெப்போ வட்டி உயர்வு அல்லது குறைவை வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட வங்கிகளுக்கான வட்டி கூடும் அல்லது குறையலாம். ஆக இது பொதுமக்கள் மத்தியிலும் கவனம் பெற்ற ஒன்றாக இருக்கனும்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications