ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் (Franklin Templeton) என்கிற மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனியின் மியூச்சுவல் ஃபண்டுகள் பிரச்சனையைப் பற்றிப் படித்து இருப்பீர்கள்.
இந்த ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் என்கிற நிறுவனம், தன் 6 கடன் சார்ந்த ஃபண்டுகளில் திரட்டிய பணத்தை, அதிக ரிஸ்க் எடுத்து, தரமற்ற அல்லது தரம் குறைந்த கடன் திட்டங்களில் முதலீடு செய்தது.
விளைவு 6 மியூச்சுவல் ஃபண்டுகளையே மூடும் அளவுக்கு போய் இருக்கிறது. இந்த ஆறு ஃபண்டுகளில் சுமாராக 30,000 கோடி ரூபாய் மக்கள் பணம் முதலீடுகளாக இருந்ததும் இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது.
ஆர்பிஐ
இப்போது அந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள், தங்கள் பணத்தை ரெடீம் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்ட்களில் ஏற்பட்டு இருக்கும் லிக்விடிட்டி பிரச்சனைகளை சமாளிக்க, மத்திய ரிசர்வ் வங்கி 50,000 கோடி ரூபாயை சிறப்பு லிக்விடிட்டி வசதியாக அறிவித்து இருக்கிறது.
பங்குச் சந்தை
இந்த அறிவிப்புக்குப் பின் இந்திய பங்குச் சந்தைகள் நல்ல ஏற்றம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இந்த லிக்விடிட்டி வசதி இன்று முதல் மே 11, 2020 வரை இருக்குமாம் அல்லது ஒதுக்கப்பட்ட பணம் முழுமையாக பயன்படுத்தப்படும் வரை இருக்குமாம்.
ரெப்போ ஆபரேஷன்
மத்திய ரிசர்வ் வங்கி, 90 நாட்களுக்கு சிறப்பு ரெப்போ ஆபரேஷன் செய்ய இருக்கிறதாம். அதுவும் நிர்ணயித்த ரெப்போ ரேட்டில் (Fixed Repo rate). இப்போதைக்கு, இந்த லிக்விடிட்டி அழுத்தம், அதிக ரிஸ்க் எடுத்து முதலீடு செய்யும் கடன் மியூச்சுவல் ஃபண்டுகளோடு நிறுத்தப்பட்டு இருக்கிறது. பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்டுகளில் லிக்விடிட்டி இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி.
ஆர்பிஐ ஆறுதல்
மத்திய ரிசர்வ் வங்கி உஷாராக இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால், இந்திய பொருளாதாரத்தில் ஏற்படும் எதிர் வினைகள் மற்றும் பிரச்சனைகளைக் குறைக்க, இந்தியாவில் நிதி நிலைத் தன்மையை (Financial Stability) உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மத்திய ரிசர்வ் வங்கி எடுக்கும் எனச் சொல்லி கொஞ்சம் ஆறுதல் அளித்து இருக்கிறது ஆர்பிஐயின் பேச்சு.
சமாளிப்பு
இன்னும் இந்தியாவுக்கும் இந்தியாவின் வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு என்ன மதிரியான சோதனைகள் காத்திருக்கிறதோதெரியவில்லை. எப்படியோ மத்திய ரிசர்வ் வங்கி, இந்த பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக சமாளித்துக் கொண்டு இருக்கிறது என்பது மட்டுமே ஒரே ஆறுதலாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications