ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் அதன் வட்டி விகித நிர்ணயக் குழுவான நாணய கொள்கைக் குழுவின் (எம்பிசி) கூடுதல் கூட்டம் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து 82 ரூபாய்க்கு மேல் இருக்கும் நிலையில், உணவு பணவீக்கம், நாட்டு மக்களின் நுகர்வின் அளவுகள் அனைத்தும் மோசமான நிலையிலேயே உள்ளது.
இந்த நிலையில் சற்றும் எதிர்பார்க்காத விதமாக ஆர்பிஐ மே மாத திடீர் கூட்டத்தைப் போல் நவம்பர் 3 ஆம் தேதி நாணய கொள்கைக் குழுவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது.
ஆர்பிஐ
இந்தியாவின் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்கவும், ரூபாய் மதிப்பின் சரிவை தடுத்து நாட்டின் பொருளாதாரம், வர்த்தக வளர்ச்சிக்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்க வேண்டியது மிகவும் முக்கியக் கடைமையைக் கொண்டு இருக்கும் ஆர்பிஐ திடீரென நவம்பர் 3ஆம் தேதி நாணய கொள்கை கூட்டத்தை அறிவித்துள்ளது.
சக்திகாந்த தாஸ்
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மே மாதத்தில் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு முன்பாக அன்னிய முதலீடுகள் வெளியேறுவதைப் பாதுகாக்க வேண்டும் என்ற முக்கியக் காரணத்திற்காகத் திடீர் நாணய கொள்கை கூட்டத்தை ஏற்பாடு செய்தார்.
இரண்டாவது முறையாகத் திடீர் கூட்டம்
இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி சக்திகாந்த தாஸ் இரண்டாவது முறையாகத் திடீர் நாணய கொள்கை கூட்டத்தைக் கூட்டியுள்ளார். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அட்டவணையின்படி, ஏப்ரல் மாதம் தொடங்கி ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் ஆறு நாணய கூட்டங்கள் நடக்கும் எனத் திட்டமிடப்பட்டன.
நவம்பர் 3
இந்த நிலையில் ஆர்பிஐ-யின் நாணய கொள்கை கூட்டம் கடைசியாகச் செப்டம்பர் 28 - 30, 2022 அன்று கூடியது, இதைத் தொடர்ந்து ஆர்பிஐ அட்டவணைப் படி டிசம்பர் 5 - 7, 2022 அன்று சந்திக்கத் திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே நவம்பர் 3 ஆம் தேதி அவரச கூட்டம் ஏற்பாடு செய்துள்ளது.
ரெப்போ விகிதம்
இந்த நிலையில் இக்கூட்டத்தில் ஆர்பிஐ கட்டாயம் அதிகரித்து வரும் ரீடைல் பணவீக்கத்தையும், தொடர்ந்து சரிவிலேயே இருக்கும் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் காப்பாற்றக் கட்டாயம் ரெப்போ விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் இக்கூட்டத்தில் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கை குறித்து அறிவிப்புகள் வெளியாகலாம்.
ரெப்போ விகிதம் 5.90%
செப்டம்பர் 30 அன்று ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் அதிகரித்து வரும் பணவீக்க பாதிப்புகளைக் குறைக்க ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துப் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 5.90% ஆக உயர்த்தியது.
சில்லறை பணவீக்க இலக்கு
செப்டம்பர் வரையிலான கடந்த 10 காலாண்டுகளில் எட்டுக் காலாண்டுகளில் பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் கணிப்புகளை விட அதிகமாக உள்ளது, அதே சமயம் சில்லறை பணவீக்கம் அளவு ஜனவரி முதல் ரிசர்வ் வங்கியின் இலக்கான 4%-6% வரம்பைத் தாண்டியது.
இந்தியாவின் நிலை
இந்தியப் பொருளாதாரம் 2023 ஆம் நிதியாண்டில் 7 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என்றும், நடப்பு நிதியாண்டிற்கான நிதிப் பற்றாக்குறை அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி-யில் 6.5 சதவீதமாக இருக்கும், நடப்பு கணக்குப் பற்றாக்குறை (CAD) 3.6% ஆக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என CareEdge பொருளாதார வல்லுநர்கள் அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications