யாரந்த மூன்று பேர்.. ரிசர்வ் வங்கி கமிட்டியில் புதியதாக இணைப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம், கடந்த வாரம் நடப்பதாக இருந்த நிலையில், உறுப்பினர்கள் குறைவாக இருப்பதால் கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

ரிசர்வ் வங்கியின் கமிட்டியில் மொத்தம் 6 உறுப்பினர்கள் இருப்பார்கள். அவர்களில் குறைந்த பட்சம் நான்கு பேராவது இருந்தால் தான் பணவியல் கொள்கை கூட்டத்தினை நடத்த முடியும். ஆனால் குறைவான உறுப்பினர்களே இருந்த நிலையில், தற்போது ரிசர்வ் வங்கி மூன்று பேரை புதியதாக தனது கொள்கை கூட்ட குழுவில் இணைத்துள்ளது.

யாரந்த மூன்று பேர்.. ரிசர்வ் வங்கி கமிட்டியில் புதியதாக இணைப்பு..!

அவர்களை பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம். அவர்களில் சஷாங்க் பிடே, அசிமா கோயல், ஜெயந்த் வர்மா உள்ளிட்ட மூன்று பேரைத் தான் ஆர்பிஐ தற்போது நியமித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் சட்டப்படி வெளி உறுப்பினர்களுக்கான பதவிக் காலம் 4 ஆண்டுகளாகும்.

சரி யார் இந்த சஷாங்க் பிடே, நேஷனல் கவுன்சில் பார் அப்ளைடு எக்னாமிக் ரிசர்ச் கவுன்சிலின் (National Council for Applied Economic Research) மூத்த ஆலோசகராக இருந்துள்ளார்.

மற்றொரு உறுப்பினரான அசிமா கோயல், இந்திரா காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெவலப்மென்ட் ரிசர்ச்சில் (Indira Gandhi Institute of Development Research.) பேராசியராகவும் பணி புரிந்துள்ளார்

ஜெயந்த் ஆர் வர்மா, அகமதாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்டில் பேராசியராகவும் பணி புரிந்துள்ளார்.

இந்த குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்கள் ரிசர்வ் வங்கியின் ஆளுனர் சக்தி காந்த தாஸ், துணைத் தலைவர் மைக்கேல் பத்ரா, மற்றும் நிர்வாக இயக்குனர் ஜனக் ராஜ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

மத்திய வங்கியின் இந்த பணவியல் குழுவில் உள்ள உறுப்பினர்கள், திறன், ஒருமைப்பாடு, பொருளாதார நிலைப்பாடு, பணவியலில் அறிவும் அனுபவம் கொண்ட உறுப்பினர்களை தான் இந்த கமிட்டியில் தேர்தெடுக்கப்படுவார்கள். இந்த நிலையில் தான் இந்த மூன்று புதிய உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே சரியான குழு உறுப்பினர்கள் இல்லாத நிலையில் தான் பணவியல் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஆறு பேர் அடங்கிய குழு இருப்பதால் அக்டோபர் 7 முதல் அக்டோபர் 10 வரை இந்த கூட்டம் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு வட்டி விகிதங்கள் சில முறை குறைக்கப்பட்டிருந்தாலும், கடந்த முறை கூட்டத்தில் வட்டி விகிதம் மாற்றப்படவில்லை. இந்த நிலையில் நாளை தொடங்க விருக்கும் இந்த கூட்டத்தில் வட்டி குறைப்பு இருக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்ப்போமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI announces 3 new members appointed to RBI’s MPC

RBI announces three new members appointed to RBI’s MPC
Story first published: Tuesday, October 6, 2020, 15:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X