வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் சலுகை.. இனி எல்லாமே இலவசம்.. RBI வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு..!!

இந்திய ரிசர்வ் வங்கி சாமானிய மக்களுக்கு ஒரு பெரிய நிம்மதியை அளிக்கும் வகையில், 'ஜீரோ பேலன்ஸ்' கணக்குகள் (Basic Savings Bank Deposit - BSBD) எனப்படும் அடிப்படை சேமிப்புக் கணக்குகளின் விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள், மிக குறைந்த தொகையைச் சேமிக்கும் மக்களுக்கும், ஏழைகளுக்கும் வங்கிச் சேவைகளை இன்னும் எளிதாக கிடைக்க செய்யும்.

வரம்பில்லாத டெபாசிட் : இனி ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்குப் பல சேவைகள் கட்டணமில்லாமல் கிடைக்கும். இந்த விதிமுறைகள் ஏப்ரல் 1, 2026 முதல் கட்டாயம் அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் சலுகை.. இனி எல்லாமே இலவசம்.. RBI வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு..!!

டெபாசிட்டுக்கு வரம்பு இல்லை : வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் மாதந்தோறும் எத்தனை முறை வேண்டுமானாலும் பணத்தை வரவு வைக்கலாம். இதற்கு எந்த அதிகபட்ச வரம்பும் கிடையாது.

இலவச கார்டு : ஏ.டி.எம். அல்லது டெபிட் கார்டை பயன்படுத்த இனி ஆண்டுதோறும் புதுப்பித்தல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.

இலவச செக் புக் : ஆண்டுக்கு குறைந்தபட்சம் 25 பக்கங்கள் கொண்ட காசோலைப் புத்தகம் (Checkbook) இலவசமாக வழங்கப்படும்.

அனைத்து சேவையும் இலவசம் : இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், பாஸ் புக் அல்லது மாதாந்திர வங்கி அறிக்கை போன்ற நவீன சேவைகளும் எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் வழங்கப்படும்.

UPI, NEFT பரிவர்த்தனைகளுக்குப் பெரும் நிவாரணம் : இந்தப் புதிய விதிகளில் மிகவும் முக்கியமான மற்றும் மக்களுக்கு நிம்மதி அளிக்கும் அம்சம் என்னவென்றால், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அனைத்தும் இலவசம்.

பணம் எடுக்கும் வரம்பு : வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்தில் தங்கள் வங்கிக் கிளை அல்லது பிற வங்கிகளின் ஏ.டி.எம்.கள் மூலம் குறைந்தபட்சம் 4 முறை இலவசமாகப் பணம் எடுக்க வங்கி கட்டாயம் அனுமதிக்க வேண்டும்.

டிஜிட்டல் பரிவர்த்தனை கணக்கில் வராது : யு.பி.ஐ (UPI), ஐ.எம்.பி.எஸ் (IMPS), என்.இ.எஃப்.டி (NEFT) மற்றும் ஆர்.டி.ஜி.எஸ் (RTGS) போன்ற அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளும், நீங்கள் இலவசமாக பணம் எடுக்கும் அந்த 4 முறை வரம்புக்குள் கணக்கில் வராது. அதாவது, இந்த ஆன்லைன் பணப் பரிமாற்றங்களுக்கு தனியாக கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. இது கிராமப்புறங்களிலும் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை அதிகரிக்க உதவும்.

கணக்கை மாற்றிக்கொள்ள வாய்ப்பு : ஏற்கனவே ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருப்பவர்கள், இந்த புதிய சலுகைகளை தங்கள் வங்கியில் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம். அதேபோல், சாதாரண சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள், வேறு எந்த வங்கியிலும் கணக்கு வைத்திருக்கவில்லை என்றால், தங்கள் கணக்கை இந்தச் சலுகைகள் நிறைந்த ஜீரோ பேலன்ஸ் கணக்காக மாற்றிக் கொள்ளவும் முடியும். இந்த புதிய விதிகளின் மூலம், நாட்டின் அடித்தட்டு மக்களுக்கும் மேம்படுத்தப்பட்ட வங்கிச் சேவை கிடைப்பதை ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+