சென்னை: இந்தியாவில் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் , வங்கி சாராத நிதி நிறுவனங்களை நிர்வகிக்கும் அமைப்பாக இந்திய ரிசர்வ் வங்கி இயங்கி வருகிறது. ரிசர்வ் வங்கியை பொறுத்தவரை அவ்வப்போது வங்கிகள் கடன்களை வழங்குவதற்கான விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை அறிவித்த வண்ணம் இருக்கிறது.
அந்த வகையில் புதிதாக மூன்று விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகின்றன. இந்த புதிய விதிமுறைகள் வங்கிகளில் கடன் வாங்கி இருப்பவர்களுக்கு பெரிய சாதகங்களை ஏற்படுத்தி தந்திருக்கின்றன . குறிப்பாக நம்முடைய இஎம்ஐ- களை வேகமாக குறைக்கும் வகையில் புதிய விதிமுறைகள் அமைந்துள்ளன. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அந்த முக்கியமான அறிவிப்புகள் என்னென்ன என்பதை தற்போது நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தற்போதுள்ள நடைமுறையின் படி வங்கியில் தங்களுடைய அனைத்து வீட்டு மற்றும் சில்லறை கடன்களுக்கான ஃபுளோட்டிங் வட்டி விகிதங்கள் மற்றும் எம்எஸ்எம்ஈ நிறுவனங்களுக்கு வழங்கக்கூடிய கடன்களுக்கான ஃபுளோட்டிங் வட்டி விகிதங்களை எக்ஸ்டர்னர் பெஞ்ச்மார்க் என்ற அளவுகோலுக்கு ஏற்ப தரப்படுத்த வேண்டும். இதனை ஸ்பிரெட் என அழைக்கிறார்கள். இதனை ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வங்கிகள் மாற்ற வேண்டும் என்ற விதிமுறை இன்று வரை நடைமுறையில் இருந்து வருகிறது.
அதாவது வங்கிகளுக்கு டெபாசிட்களுக்கு அளிக்கும் வட்டி கடன்களுக்கு பெறும் வட்டி ஆகிய இரண்டுக்கும் இடையிலான வித்தியாசமே ஸ்பிரெட் என அழைக்கப்படுகிறது. ஆர்பிஐ தற்போது அளித்துள்ள இந்த புதிய விதிமுறையின் படி வங்கிகள் இந்த மூன்றாண்டு காலம் காத்திருந்து இந்த வட்டி விகிதங்களை இனி மாற்றத் தேவையில்லை . மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே வங்கிகள் ஃபுளோட்டிங் வட்டி விகிதங்களை குறைக்கலாம். மேலும் வட்டி விகிதம் என்பது ரீசெட் ஆகும்போது கடன் பெற்ற நபர்களுக்கு ஃபிக்சட் எனப்படும் நிலையான வட்டி விகிதத்திற்கு மாறுவதற்கான வாய்ப்பினை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவே இனி வங்கிகள் ஃபுளோட்டிங் வட்டி விகிதங்களை மாற்றி அமைப்பதற்கு மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதனால் மற்ற வட்டி விகிதங்களுக்கு ஏற்ப வங்கிகள் குறுகிய காலத்திலேயே விகிதங்களை மாற்ற முடியும். அதேபோல வாடிக்கையாளர்கள் ஃபுளோட்டிங் வட்டி விகிதத்தில் இருந்து நிலையான வட்டி விகித முறைக்கு மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பையும் கிடைக்கிறது.
அடுத்ததாக ரிசர்வ் வங்கி தங்கத்தை மூலப் பொருட்களாக கொண்டு உற்பத்தி தொழில் மேற்கொள்ளும் சிறு உற்பத்தியாளர்களுக்கு மூலதன கடன் வழங்க அனுமதி தந்துள்ளது. இதுநாள் வரை நகை கடை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த கடன் வழங்கப்பட்டது. இனி தங்கத்தை மூல பொருளாக கொண்டு தொழில் செய்யும் அனைவருக்கும் மூல தன கடன் வழங்கலாம் என்றும் சிறு நகரங்களில் செயல்படக்கூடிய கூட்டுறவு வங்கிகளும் இந்த கடன்களை வழங்கலாம் என்றும் ஆர்பிஐ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
More From GoodReturns

சிறு சேமிப்பு திட்டங்களுக்கு ஜாக்பாட் வட்டி தான்! ஆனால் அவசரப்பட்டு முதலீடு செய்யாதீங்க - ஏன்?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications