டெல்லி: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்திய தொழில் துறையினருக்கு நல்ல செய்தியினை சொன்னார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்தியாவில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் பல தரப்பட்ட, உள் நாட்டு நிறுவனங்களுக்கு செஸ் உள்பட மொத்த கார்ப்பரேட் வரியினை கடந்த ஆண்டு செப்டம்பரில் குறைத்தார் நிர்மலா சீதாராமன்.

இது புதிதாக அக்டோபர் 01, 2019க்கு பிறகு தொடங்க இருக்கும் உற்பத்தி நிறுவனங்கள் 15% மட்டுமே வரியாக செலுத்த வேண்டி இருக்கும். இது மற்ற சர் சார்ஜ்கள் மற்றும் செஸ் போன்றவைகளை சேர்த்தால் சுமார் 17.01% ஆக செலுத்த வேண்டி இருந்தது.
இதே ஏற்கனவே உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி விகிதம் கூடுதல் வரிகளுடன் சேர்த்து, 25.07% என்றும், இதே புதிய நிறுவனங்களுக்கு 17.01%ஆக மாற்றப்பட்டது. இந்த வரி விகிதமான அன்னிய முதலீடுகளை ஈர்க்கலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புகளை போல் அப்படி ஏதும் நடக்கவில்லை. ஆனால் நிறுவனங்கள் கடனைக் குறைக்கவும், பண இருப்புகளை உருவாக்கவும் பயன்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தனது 2019 - 20ம் ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் பொருளாதாரத்தில் முதலீட்டு நடவடிக்கைகள் மேலும் பலவீனமடைந்துள்ளதால், பொருளாதாரத்தினை புதுபிக்க ஒரு சாத்தியமான வழியாக சொத்துகளை பணமாக்குதல் மற்றும் துறைமுகங்களை தனியார்மயமாக்குதல் ஆகியவற்றை, பொருளாதாரத்தினை மீட்டெடுப்பதற்கான வழியாக ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது.
முதலீட்டின் தேவை மற்றும் மூலதன செலவுகள் ஆகியவற்றில் உள்ள பலவீனத்தினை, சுட்டிக் காட்டிய அரசாங்கம் தலைமையிலான மறுமலர்ச்சி தேவை என்றும் அது கூறியுள்ளது.
மூலதன பொருட்களின் உற்பத்தி தரவு கூட, முதலீட்டு தேவையின் குறிகாட்டியாகும். இது ஜூன் 2020ல் 36.9% வீழ்ச்சி கண்டுள்ளது. இதே ஏப்ரல் முதல் ஜூன் வரையில் 64.4% வீழ்ச்சி கண்டு இருந்தது. இதே ஜூலை மாதத்தில் 24.7% வீழ்ச்சி கண்டுள்ளது. ஜூலை 2020 மாதத்தில் மூலதன பொருட்களின் இறக்குமதி 24.7% குறைந்தது. இதே ஏப்ரல் - ஜூன் காலத்தில் 46.7% வீழ்ச்சி கண்டுள்ளது.
கார்ப்பரேட் வரி சீர்திருத்தம் மூலதன செலவினங்களை அதிகரிப்பதில் இன்னும் இழுவை பெறவில்லை என்றும் ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. இதனை மீட்டுக் கொண்டு வர ஒரு முயற்சி தேவை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இந்த சீர்திருத்தமானது கொண்டு வரப்பட்ட நிலையில், அடுத்த சில மாதங்களில் கொரோனா வந்தது. இது ஒட்டுமொத்த உலகினையும் ஆட்டிப்படைத்து வரும் நிலையில், முதலீடுகள் என்பது வெகுவாக குறைந்து போனது.
More From GoodReturns

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!



Click it and Unblock the Notifications