இந்திய ரிசர்வ் வங்கியில் வெள்ளிக்கிழமை சக்திகாந்த தாஸ் தலைமையில் நடந்த 589வது சென்டரல் போர்ட் ஆப் டைரெக்டர்ஸ் கூடடத்தில் உபரியாக இருக்கும் 99,122 கோடி ரூபாய் தொகையை மத்திய அரசுக்கு அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த உபரி தொகையானது ஜூன் 2020 முதல் மார்ச் 2021ஆம் ஆண்டுக் காலத்தில் சேமிக்கப்பட்ட நிதி என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ரிசர்வ் வங்கி risk buffer அளவீட்டை 5.50 சதவீதம் தொடர்ந்து நிலை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

இதேபோல் ரிசர்வ் வங்கி தனது கணக்கீட்டு ஆண்டுக் காலத்தை ஜூலை முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தை தற்போது ஏப்ரல் முதல் மார்ச் ஆக மாற்றியுள்ளது. இதன் வாயிலாகவே தற்போது 9 மாதங்களுக்கான தொகையைக் கணக்கீட்டு உபரி தொகையை மத்திய அரசுக்கு அளித்துள்ளது.
மேலும் இந்தக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதாரம், சர்வதேச பாதிப்புகள், உள்நாட்டுப் பாதிப்புகள், புதிய கொள்கை மாற்றங்கள், கொரோனா 2வது அலையில் ஏற்பட்டு உள்ள பாதிப்புகளை எப்படிக் குறைப்பது ஆகியவற்றையும் ஆலோசனை செய்துள்ளது.
மத்திய அரசு தனது 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையின் படி ரிசர்வ் வங்கியிடம் இருந்து 50000 கோடி ரூபாய் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த நிதியாண்டில் முழுக் கணக்கீட்டு ஆண்டில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து 57,128 கோடி ரூபாய் மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது நினைத்தது விடவும் அதிகமாக அதாவது ரூ.99,122 கோடி அளித்துள்ளது, 2018-19ஆம் நிதியாண்டு கணக்கீட்டில் ரிசர்வ் வங்கி தனது கூடுதலாக வைத்திருந்த அளவீட்டையும் சேர்த்துக் கொடுத்த காரணத்தால் சுமார் 1.76 லட்சம் கோடி ரூபாய்க் கொடுத்தது. இதன் பின்பு இப்போது தான் அதிகப்படியான தொகையை இப்போதுதான் கொடுத்துள்ளது
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications