ஃபெடரல் வங்கியின் (Federal Bank) நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக கிருஷ்ணன் வெங்கட் சுப்ரமணியனை நியமிப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒப்புதல் அளித்துள்ளது என்று வங்கி திங்களன்று தெரிவித்துள்ளது. தற்போது சிஇஓவாக பணியாற்றும் ஷியாம் சீனிவாசனின் பதவிக்காலம் முடியவிருப்பதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுப்பிரமணியன் வெங்கட்ராமனின் 3 ஆண்டு கால பதவிக்காலம், தற்போதைய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஷியாம் சீனிவாசனின் பதவிக்காலம் முடிந்த பிறகு தொடரும் என கூறப்படுகிறது.

தற்போதைய சிஇஓ ஷியாம் சீனிவாசனின் பதவிக்காலம் செப்டம்பர் 22, 2024 அன்று முடிவடைகிறது, எனவே செப்டம்பர் 23, 2024 முதல் சுப்ரமணிய கிருஷ்ணன் வெங்கட் பதவிக்காலம் தொடரும்.
இதற்கு முன்னர் சுப்ரமணியன், கார்ப்பரேட் பேங்கிங், கமர்ஷியல் பேங்கிங், பிரைவேட் பேங்கிங், அசெட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பிரிவுகளுக்கு தலைமை தாங்கி, அதன் பின் ஏப்ரல் 30, 2024 வரை கோடக் மஹிந்திரா வங்கி லிமிடெட்டின் கூட்டு நிர்வாக இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
சுப்ரமணியன் கல்வி: வாரணாசியில் உள்ள IIT-இல் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டமும், மும்பை ஜம்னாலால் பஜாஜ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸில் நிதி நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். இவர் அக்கவுண்டன்ட் வேலையையும் செய்ததாகக் கூறப்படுகிறது.
கோடக் மஹிந்திரா ஃபைனான்ஸ் லிமிடெட் மூலம் NBFC துறையில் சுப்ரமணியனின் தொழில் தொடங்கியது. இவருக்கு இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங்-இல் அனுபவம் உள்ளது.
அவரது முந்தைய பணியில், தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், வங்கி சேவைகளை வலுப்படுத்துவதிலும் சுப்ரமணியன் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
மே 06, 2024 அன்று, வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிக்கான ஒப்புதலுக்காக, இந்திய ரிசர்வ் வங்கிக்கு ஃபெடரல் வங்கி செய்த விண்ணப்பத்தின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி, சுப்பிரமணியனை சிஇஓவாக நியமித்துள்ளது.
RBI ஜூலை 22, அன்று எழுதிய கடிதத்தில், கிருஷ்ணன் வெங்கட் சுப்ரமணியனை 3 ஆண்டுகளுக்கு வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
செப்டம்பர் 23, 2024 அன்று சியாம் சீனிவாசனின் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு சுப்ரமணியனின் பதவிக் காலம் தொடரும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications