யெஸ் வங்கியின் மேனேஜிங் டைரக்டர் மற்றும் சிஇஓவாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரசாந்த் குமார் நியமனம் செய்யப்பட்டார்.
பிரசாந்த் குமார் அவர்களின் நியமனத்திற்கு பின்னர் கடும் வீழ்ச்சியில் இருந்த யெஸ் வங்கி நன்கு வளர்ச்சி அடைந்தது.
பிரசாந்த் குமார் அவர்களின் சிறப்பான பணி காரணமாக அவர் மீண்டும் யெஸ் வங்கியின் மேனேஜிங் டைரக்டர் மற்றும் சிஇஓவாக மூன்று ஆண்டுகளுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிரசாந்த் குமார்
யெஸ் வங்கியின் மேனேஜிங் டைரக்டர் மற்றும் சிஇஓவாக பிரசாந்த் குமார் மீண்டும் மூன்று வருடத்திற்கு அதே பதவியில் நீடிக்க இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
யெஸ் வங்கி
கடந்து 2020 ஆம் ஆண்டில் யெஸ் வங்கி மிகவும் மோசமான நிலையில் இருந்தபோது அந்த வங்கியை புனரமைக்க பிரசாந்த் குமார் எம்டி மட்டும் சிஇஓவாக நியமனம் செய்யப்பட்டார். அவரது தீவிர முயற்சியின் மூலம் யெஸ் வங்கி தற்போது நஷ்டத்திலிருந்து மீண்டு உள்ளது என்பதும், ஆற்றல் மிக்க வங்கியாக மாறி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிரடி நடவடிக்கை
நஷ்டமடைந்த ஒரு வங்கி குறுகிய காலத்திற்குள் சரிவிலிருந்து மீண்டதற்கு பிரசாந்த் குமார் அவர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கைகளே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
3 ஆண்டுகள்
இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 6 முதல் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு யெஸ் வங்கியின் எம்டி மற்றும் சிஇஓவாக பிரசாந்த் குமார் அவர்களை நியமிக்க இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து இந்த தகவலை யெஸ் வங்கி அறிக்கை ஒன்றின் மூலம் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
யெஸ் வங்கியில் பணிபுரிவதற்கு முன்னர் பிரசாந்த் குமார், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் துணை நிர்வாக இயக்குனராக இருந்தார் என்பதும் அதுமட்டுமின்றி அவர் பல்வேறு பதவிகளில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications