இந்தியாவில் செயல்படக்கூடிய அனைத்து வங்கிகளுமே மத்திய ரிசர்வ் வங்கியான ஆர்பிஐயின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் என அனைத்துமே ஆர்பிஐ வெளியிடக்கூடிய விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடந்தாக வேண்டும்.
ரிசர்வ் வங்கியை பொறுத்தவரை தொடர்ச்சியாக வங்கிகளின் செயல்பாடுகளை கண்காணித்து அவ்வப்போது விதிமுறைகளை மாற்றி அமைத்த வண்ணம் இருக்கிறது . அந்த வகையில் இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் பல்வேறு கட்டணங்கள் வசூல் செய்யப்படுவது தொடர்பாக சில கேள்விகளை முன் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

வங்கிகளை பொறுத்தவரை நாம் கடன் வாங்கும்போது ஆகட்டும் வங்கிகள் மக்களுக்கு வழங்கக்கூடிய பல்வேறு சேவைகளுக்கும் தனியாக பல்வேறு கட்டணங்களை வசூல் செய்கின்றன. இந்த கட்டணங்களுக்கு எல்லாம் முடிவுக்கட்டும் வகையிலான ஒரு நடவடிக்கையை எடுப்பதற்கு ஆர்பிஐ திட்டமிட்டு இருக்கிறதாம். எக்னாமிக் டைம்ஸ் இது தொடர்பான செய்தியை வெளியிட்டு இருக்கிறது .
இதன்படி இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அனைத்து வங்கிகளிடமும் அண்மையில் நடந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்தின் போது வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படக்கூடிய சர்வீஸ் சார்ஜ்களை குறைக்க வேண்டும் என கூறி இருக்கிறார்களாம். டெபிட் கார்டுகளுக்கான சர்வீஸ் சார்ஜுகள் ,டெபிட் கார்டு மேலாண்மை கட்டணங்கள் ,மினிமம் பேலன்ஸை வைக்காமல் இருப்பதற்காக வசூல் செய்யப்படக்கூடிய அபராத கட்டணங்கள், தாமத பேமென்ட்களுக்காக வசூல் செய்யப்படும் கட்டணங்கள் மற்றும் பிற செயலாக்க கட்டணங்களை எல்லாம் குறைக்க வேண்டும் என அப்போது தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்தியாவில் அண்மைக்காலமாக சில்லறை கடன் வாங்கும் நபர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கிறது. அதாவது சிறு தொழில் செய்பவர்கள், வாகன கடன்கன், தனிநபர் கடன்கள் மற்றும் குறைந்த தொகையை கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. வங்கிகளும் தற்போது இந்த வகை கடன்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் தருகின்றன.
இவ்வாறு குறைந்த வருமானம் கொண்டவர்கள் வங்கியில் கடன் வாங்கும் போது செயலாக்க கட்டணம் சர்வீஸ் கட்டணம் என பல்வேறு கட்டணங்கள் வசூல் செய்யப்படுகின்றன. இதனை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஆர்பிஐ இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்திருக்கிறது . ஆனால் வங்கிகளை பொறுத்த வரை இந்த கட்டணங்கள் தான் அவர்களுக்கு பெரிய வருவாயை தருபவையாக இருக்கின்றன .
உதாரணமாக கடன்களுக்கு அந்த கடன் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை வங்கிகளும் தனியார் நிதி நிறுவனங்களும் செயலாக்க கட்டணமாக வசூல் செய்கின்றன. அந்த வருமானத்திலேயே கை வைக்கும் வகையில் ஆர்பிஐ அறிவுரை அமைந்துள்ளது. ஆனால் வங்கிகள் இந்த கட்டணங்களை முழுவதுமாக நீக்காமல் மாற்று நடவடிக்கை எடுக்கலாம் அல்லது குறைக்கலாம் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications