இந்தியாவில் வங்கி மோசடிகள், முறையாக நிர்வாகம் செய்யாத நிதி நிறுவனங்கள் மூலம் மக்கள் தங்களுடைய பணத்தை இழப்பது மட்டும் அல்லாமல் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் காரணத்தால் இந்திய ரிசர்வ் வங்கி நாட்டில் இருக்கும் அனைத்து நிதி நிறுவனங்களையும் கூர்ந்து கவனித்து வருகிறது, அதிலும் குறிப்பாக சிறு நிதி நிறுவனங்கள் முக்கிய இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆர்பிஐ இன்று நான்கு NBFC நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்து, பிற 13 NBFC நிறுவனங்கள் தங்களுடைய பதிவுச் சான்றிதழைத் தானாக முன்வந்து ஒப்படைத்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி நான்கு NBFCகளின் பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்ய முக்கிய காரணமாக இருந்தது, வங்கி சட்டம் 1934 இன் பிரிவு 45-IA (6) கீழ் மீறல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
ஆர்பிஐ நடவடிக்கை மூலம் பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் ராஜஸ்தானின் பாரத்பூர் இன்வெஸ்ட்மெண்ட் லிட், மத்தியப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட KS ஃபின்லீஸ் லிமிடெட், தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட பில்ட் கான் ஃபைனான்ஸ் லிமிடெட் (Build Con Finance Limited) மற்றும் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஆப்ரேட்டிங் லீஸ் அண்ட் ஹயர் பர்ச்சேஸ் நிறுவனம் லிமிடெட் (Operating Lease and Hire Purchase Company Limited) ஆகியவை அடங்கும்.
NBFC உரிமம் ரத்து செய்யப்பட்ட நிறுவனங்கள், RBI சட்டத்தின் படி இனி எவ்விதமான நிதி நிறுவனத்தின் வணிகத்தை மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது.
NBFC உரிமம் ரத்து செய்யப்பட்டதற்குக் கூடுதலாக, ஆர்பிஐ 13 NBFC-கள் தங்களுடைய பதிவுச் சான்றிதழ்களை (CoR) தானாக முன்வைத்து ஒப்படைத்ததையும் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த முடிவும் RBI சட்டத்தின் அதே பிரிவின் கீழ் எடுக்கப்பட்டது.
பதிவு சான்றிதழ்களை (CoR) ஒப்படைத்த 13 NBFCகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சுகுணா ஃபின்கார்ப் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஸ்பாம் மெர்ச்சண்ட்ஸ் போன்றவை NBFC வணிகத்தை முற்றிலும் வெளியேறியுள்ளது.
இவ்விரு நிறுவனத்தை தொடர்ந்து மஹாம் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட், பத்மலட்சுமி ஹோல்டிங்ஸ், ரோஹினி ஹோல்டிங்ஸ் மற்றும் ரகுவம்சா ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் பதிவு செய்யாமல் இயங்கும் கோர் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனங்கள் (CIC) க்கான நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்ட காரணத்தால் பதிவு சான்றிதழை ரத்து செய்வதற்கு முன்பு சான்றிதழைத் திரும்ப ஒப்படைத்துள்ளது.
பதிவு சான்றிதழ்களை (CoR) ஒப்படைத்து ரத்துக்கு வழிவகுத்த மீதமுள்ள ஏழு நிறுவனங்கள் பட்டியலில் உமங் கமர்ஷியல் கோ பிரைவேட் லிமிடெட், மதுரா மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட், டான்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், கேனபி ஃபைனான்ஸ் லிமிடெட், மா கல்யாணேஸ்வரி ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட், வராஹகிரி இன்வெஸ்ட்மெண்ட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் தாமல் ஸ்டேஷனர்ஸ் ப்ரைவேட் லிமிடெட் ஆகியவை அடங்கும்.


Click it and Unblock the Notifications