இந்தியாவின் யுபிஐ சேவையை உலகமே வியந்து பார்த்து வருவது மட்டும் அல்லாமல் உலகின் பிற நாட்டுப் பொதுத்துறை வங்கிகளும் இதைப் பயன்படுத்துவதற்கு இந்திய அரசிடம் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.
ஏற்கனவே பல நாடுகள் யூபிஐ சேவையை அந்த நாட்டில் பயன்படுத்தக் கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகளைச் செய்து வரும் வேளையில், ஆர்பிஐ இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்கள் யுபிஐ பயன்படுத்த வலியுறுத்தியும், அதற்கான கட்டமைப்பை உருவாக்கவும் முடிவு செய்துள்ளது.
இன்று ரிசர்வ் வங்கியின் இரு மாத நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் உயர்வைத் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்ட முக்கியமான 2 அறிவிப்புகளில் இதுவும் ஒன்று.
UPI பேமெண்ட்
இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவில் ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துவதைத் தாண்டி, இந்தியா முழுவதிலும் உள்ள டிஜிட்டல் பேமெண்ட் கட்டமைப்பைப் பயன்படுத்தி UPI சேவையைப் பேமெண்ட்-க்காகப் பயன்படுத்த ஆர்பிஐ வலியுறுத்தியுள்ளது.
ஜி20 மாநாடு
இத்திட்டத்தின் துவக்கமாக ஜி20 மாநாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு நாட்டின் முக்கியமான விமான நிலையத்தில் யூபிஐ சேவையைப் பயன்படுத்துவதற்காக வசதியை அளிக்கப்படும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
என்ஆர்ஐ
சமீபத்தில் ஆர்பிஐ இந்தியாவில் வங்கிக் கணக்குகளை வைத்துக்கொண்டு வெளிநாட்டில் வசிக்கும் என்ஆர்ஐ -கள், தங்கள் சர்வதேச மொபைல் எண்களுடன் இனி மிகவும் எளிதான முறையில் டிஜிட்டல் முறையில் பணத்தைப் பரிமாற்றம் செய்ய முடியும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மொபைல் நம்பர்
இந்தியாவில் வங்கிக் கணக்கை வைத்துக்கொண்டு வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அந்நாட்டில் பயன்படுத்தும் மொபைல் நம்பர் வைத்துக்கொண்டே இந்தியாவில் நிதி பரிமாற்றத்தைச் செய்ய முடியும் கட்டமைப்பை உருவாக்கப்பட்டு உள்ளது.
10 நாடுகள்
இப்புதிய முயற்சியின் கீழ் முதல் கட்டமாகச் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், ஓமன், கத்தார், அமெரிக்கா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய 10 நாடுகளின் குறியீடுகளைக் கொண்ட மொபைல் எண்களிலிருந்து யூபிஐ தளத்தில் இணைந்து பணப் பரிமாற்றம் செய்ய முடியும்.
புதிய முயற்சிகள்
அதாவது வெளிநாட்டில் இருந்துக்கொண்டே என்ஆர்ஐ-கள் இந்தியாவில் யூபிஐ சேவை மூலம் பணப்பரிமாற்றம் செய்ய முடியும். இதற்கு அடுத்தக் கட்டமாகத் தான் ஆர்பிஐ இந்தியா வரும் என்ஆர்ஐ-கள் யூபிஐ சேவையைப் பயன்படுத்தும் கட்டமைப்பை ஜி20 மாநாட்டில் அறிமுகம் செய்ய உள்ளது.
காயின் வென்டிங் மெஷின்
இதேவேளையில் மற்றொரு முக்கியத் திட்டமாக மக்கள் மத்தியில் இருக்கும் சில்லறைக் காசுகளுக்கான தட்டுப்பாட்டைப் போக்க ஆர்பிஐ நாட்டின் 12 நகரங்களில் காயின் வென்டிங் மெஷின்களை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக இன்றைய இரு மாத நாணய கொள்கை கூட்டத்தில் அறிவித்தது.
பைலட் திட்டம்
இந்தக் காயின் வென்டிங் மெஷின்களின் அறிமுகம் ஒரு பைலட் திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டு, இதில் முயற்சியில் ஏற்படும் பிரச்சனைகளைச் சரி செய்து இந்தியா முழுக்க விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. ஏடிஎம் இயந்திரத்தைப் போலவே இயங்கும் இந்தக் காயின் வென்டிங் மெஷின்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications