சமீபத்திய காலகட்டத்தில் கிரிப்டோகரன்சி குறித்தான விவாதங்கள் அதிகரித்துள்ளன. இதன் மீதான ஆர்வம் அதிகரித்து வரும் அதே வேளையில் பலதரப்பும் பலவிதமான கருத்துகளை கூறி வருகின்றன.
குறிப்பாக இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் கிரிப்டோகரன்சி குறித்தான ஆர்வம் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் தான் இந்திய அரசு கிரிப்டோகரன்சியை ஒழுங்குமுறைப்படுத்த மசோதாவை தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் தான் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் மற்றும் தனியார் கிரிப்டோகரன்சிகள் தொடர்பாக விவாதித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிரிப்டோகரன்சி மசோதா?
கிரிப்டோகரன்சிகள் குறித்த சட்டத்தை கொண்டு வர அரசு முன் வந்துள்ளது. தற்போது நாடளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இது குறித்து பரிசீலிக்கலாம். கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சி மசோதா 2021 தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சில தகவல்கள் இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அப்படி ஏதும் நிகழ வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரிசர்வ் வங்கி கூட்டம்
ரிசர்வ் வங்கியின் 592-வது கூட்டம், ரிசர்வ் வங்கி கவர் சக்திகாந்த தாஸ் தலைமையில் லக்னோவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கி குழு டிஜிட்டல் நாணயம் மற்றும் தனியார் கிரிப்டோ நாணயம் தொடர்பான பல்வேறு அம்சங்களையும் விவாதித்தது.
சட்டத்தில் திருத்தம்
பணமதிப்புகளை டிஜிட்டலில் சேர்ப்பதற்காக, இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934ல் திருத்தம் செய்வதற்கு, 2021 அக்டோபரில், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து ஒரு முன்மொழிவை அரசாங்கம் பெற்றுள்ளது.
நாட்டில் பிட்காயினை கரன்சியாக அங்கீகரிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பிட்காயின் பரிவர்த்தனைகள் குறித்த தரவுகளை அரசாங்கம் சேகரிக்கவில்லை என்றும் அவர் மக்களவையில் தெரிவித்தார். பிட்காயினை ஒரு கரன்சியாக அங்கீகரிக்க அரசாங்கத்திடம் அந்த திட்டமும் இல்லை என கூறியிருந்தார்.
எதிர்பார்ப்பு
ஆக இந்த நிலையில் இந்த விவாதம் நடத்தப்பட்டிருப்பது, கிரிப்டோகரன்சி மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல இந்தியாவின் புதிய டிஜிட்டல் கரன்சி குறித்தான எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஏற்கனவே ரிசர்வ் வங்கி நிதியமைச்சகத்திற்கு ஒரு அறிக்கையை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications