கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசு திடீரென 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. திடீரென வெளியான இந்த அறிவிப்பு கோடிக்கணக்கான இந்திய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அதன் பிறகு நாட்டில் புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நோட்டுகளின் புழக்கமும் நிறுத்தப்பட்டன.
தற்போது இந்தியாவில் 500 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் அதற்கும் கீழ் மதிப்பு கொண்ட நோட்டுகள் தான் புழக்கத்தில் இருக்கின்றன. பெரும்பாலான பகுதியில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துவிட்டன. பல இடங்கள் upi முறையில் நாம் ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிருக்கு பணத்தை செலுத்தி விடுகிறோம். ஒரு பொருள் வாங்கினால் கூட யுபிஐ முறையில் பணத்தை தருகிறோம். கைகளில் பணத்தை எடுத்து பயன்படுத்தும் பழக்கம் மக்களிடையே குறைந்து இருக்கிறது.

தற்போது இந்தியாவில் அதிகமாக 100 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் தான் புழக்கத்தில் இருக்கின்றன. இந்த சூழலில் இந்த 100 ரூபாய் மட்டும் 500 ரூபாய் நோட்டுகளில் ரிசர்வ் வங்கி மாற்றத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. Trak.in என்ற தளம் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. அதன் படி 100 ரூபாய் மட்டும் 500 ரூபாய் நோட்டுகளில் ரிசர்வ் வங்கி மாற்றத்தை கொண்டுவர முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இதனால் மீண்டும் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வந்துவிடுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. ஆனால் அப்படி எந்த ஒரு முடிவையும் இந்திய ரிசர்வ் வங்கி எடுக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் கள்ள நோட்டுகள் புழக்கத்தை தடுப்பதற்காக அவ்வப்போது ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்து அப்டேட் செய்யும்.
அந்த வகையில் தற்போது அதிகமாக மக்களிடையே புழக்கத்தில் இருக்கக்கூடிய 100 ரூபாய் மட்டும் 500 ரூபாய் நோட்டுகளின் தரத்தையும் பாதுகாப்பையும் அதிகரிக்க ரிசர்வ் வங்கி இந்த ரூபாய் நோட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க திட்டமிட்டிருப்பதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது. இதன்படி தற்போது புழக்கத்தில் இருக்கக்கூடிய 500 ரூபாய் நோட்டுகளில் புதிய தொழில்நுட்ப அம்சங்களை சேர்க்க இருக்கிறார்களாம்.
தற்போது 500 ரூபாய் நோட்டுகளில் இருக்கக்கூடிய வாட்டர் மார்க் இன்னும் தெளிவாகவும் துல்லியமாகவும் புதிய ரூபாய் நோட்டுகளில் இருக்கும் வகையில் அச்சிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கள்ள நோட்டுகள் உருவாக்கப்படுவது கடினம், அதேவேளையில் போலி நோட்டுகளை எளிதாக கண்டறிந்து விட முடியும் என்றும் அதிகாரிகளும் தரப்பில் சொல்லப்படுகிறது என அந்த செய்தி குறிப்பிடுகிறது.
அதாவது கள்ள நோட்டு அடிப்பவர்கள் காபி செய்ய முடியாத வகையில் மிக நுண்ணிய எழுத்துக்கள் இதில் இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களிடையே அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதால் 100 ரூபாய் நோட்டுகளின் ஆயுட்காலத்தை அதிகரிக்க அதில் பயன்படுத்தப்படும் மை மற்றும் காகிதத்தின் தரத்தை உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு செய்து இருக்கிறதாம். இது அடிக்கடி ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கை தான்.
பொதுமக்கள் 500 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து ஒரேடியாக நீக்கிவிடுவார்கள் என்ற அச்சத்திற்கு செல்ல வேண்டிய தேவை இல்லை வழக்கம் போல புழக்கத்தில் இருக்கக்கூடிய நோட்டுகள் இருக்கும் புதிதாக அச்சிடப்படக்கூடிய ரூபாய் நோட்டுகளில் தான் இந்த புதிய அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளன என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications