ரிசர்வ் வங்கி இந்த வாரம் மட்டும் வியாழக்கிழமை நான்கு NBFC நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழை ரத்து செய்துள்ளது. இதோடு 4 NBFC நிறுவனங்கள் தாங்கள் இப்பிரிவு வர்த்தகத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து தங்களுடைய தானாக முன்வந்து பதிவுச் சான்றிதழை திரும்ப ஒப்படைந்துள்ளது.
வங்கி மற்றும் நிதி துறையில் வாராக் கடன், நிதி மோசடிகள், வங்கிகள் முறையாக தனது நிதி நிலையை ஆர்பிஐ-க்கு ஒப்படைக்காதது என பல விஷயங்களை முன்னிறுத்தி ஆர்பிஐ தொடர்ந்து அனைத்து வங்கிகள் மற்றும் NBFC-களையும் ஆய்வு செய்து வருகிறது. இந்த சோதனையில் ஆர்பிஐ பல வங்கிகளுக்கு வார்னிங் கொடுத்துள்ளது, பல வங்கிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது வருடம் முழுக்க நடைபெறும் ஒரு செயல்முறை என்பதால் அவ்வபோது வங்கி உரிமம் தொடர்பான அறிவிப்புகள் வரும்.

அப்படி ஆர்பிஐ மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜெம் இன்வெஸ்ட்மென்ட்ஸ் & டிரேடிங் கோ பிரைவேட் லிமிடெட், விஸ்தார் ஃபைனான்சியர்ஸ், அம்பிகா பார்ட்டர் பிரைவேட் லிமிடெட் மற்றும் சண்டிகரைச் சேர்ந்த ஸ்ரீ லக்வி ஃபைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட் ஆகிய 4 NBFC-க்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இதனால் இந்த நிறுவனங்கள் இனி NBFC தொடர்பாக எவ்விதமான செயல்பாடுகளையும் மேற்கொள்ள முடியாது. RBI இந்த நடவடிக்கையை விதிமீறல்கள் காரணமாக எடுத்துள்ளது என தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து 4 NBFCகள் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய பதிவுச் சான்றிதழை சரண்டர் செய்துள்ளன. ஒய்ஜி கேப்பிடல் லிமிடெட் NBFC வியாபாரத்தை முற்றிலும் நிறுத்தியுள்ளது. இன்டெல் இன்வோஃபின் இந்தியா பிரைவேட் லிமிடெட் கோர் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி (CIC) நிபந்தனைகளை பூர்த்தி செய்ய NBFC பதிவை திரும்ப கொடுத்துள்ளது. கங்கோத்ரி கமாடிட்டீஸ் & ஃபின்வெஸ்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் பெர்கின் டீலர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை இணைப்பு, அல்லது தன்னார்வ ரத்து காரணமாக சட்டப்பூர்வ நிறுவனமாக இல்லாததால் பதிவு சான்றிதழை சரண்டர் செய்துள்ளன.
இதேபோல் ஆர்பிஐ ஒடிசாவின் Parlakhemundi பகுதியை சேர்ந்த தி கோ-ஆபரேட்டிவ் அர்பன் பேங்க் லிமிடெட்க்கு RBI ரூ.13,000 அபராதம் விதித்துள்ளது. வங்கி விதிமீறல்கள் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. RBI தொடர்ந்து வங்கி மற்றும் NBFCகளை கண்காணித்து, வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
NBFCகள் இந்தியாவின் நிதி சேவைத்துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் சில நிறுவனங்கள் விதிகளை மீறுவதால் வாடிக்கையாளர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. எனவே RBI தவறு செய்யும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்கிறது, அபராதம் விதிக்கிறது. இது மற்ற நிறுவனங்களுக்கு எச்சரிக்கையாகவும் உள்ளது. பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க உதவியாகவும் உள்ளது. முதலீட்டாளர்கள் மற்றும் கடன் வாங்கியர்கள் RBI பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது முக்கியம்.
இந்த நடவடிக்கைகள் இந்திய நிதி அமைப்பின் நம்பகத்தன்மையை உறுதி செய்கின்றன. RBI தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளால், பொதுமக்களின் சேமிப்பு மற்றும் முதலீடு பாதுகாப்பாக உள்ளது. இதுபோன்ற செய்திகளை அறிந்து கொண்டு, மக்கள் பாதுகாப்பான நிதி நிறுவனங்களையே தேர்வு செய்வது அவசியம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications