சமீப காலமாக ஆர்பிஐ கூட்டுறவு வங்கிகளின் நிதி நிலை, விதிமுறைக்குள் கடைப்பிடிப்பதில் இருந்து பல விஷயங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதன் அடிப்படையில் பல வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்த ஆர்பிஐ, தற்போது புதிதாக ஒரு வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த தி கபோல் கூட்டுறவு வங்கி லிமிடெட் வங்கி உரிமத்தை ரத்து செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி திங்கள்கிழமை அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டு உள்ளது. தி கபோல் கூட்டுறவு வங்கி மூலதனம் மற்றும் வருவாய் ஈட்டும் வாய்ப்புகள் இல்லை என்பதால் வங்கி உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதை கொடர்ந்து கபோல் கூட்டுறவு வங்கி டெபாசிட்களை ஏற்றுக்கொள்வது மற்றும் டெபாசிட்களைத் திரும்பச் செலுத்துவது உள்ளிட்ட அனைத்து வங்கி சார்ந்த பணிகளை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கூட்டுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் மத்திய பதிவாளர் ஆகியோருக்கும் வங்கியை மூடுவதற்கான உத்தரவை வெளியிடவும், வங்கிக்கு ஒரு கலைப்பாளர் ஆதாவது liquidator-ஐ நியமிக்கவும் கோரியுள்ளது ஆர்பிஐ.
மேலும் இவ்வங்கி மொத்தமாக மூடப்படும் வேளையில் ஒவ்வொரு டெபாசிட்டரும் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) அமைப்பில் இருந்து 5 லட்சம் ரூபாய் வரையிலான டெபாசிட் தொகைக்கான இன்சூரன்ஸ் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதாவது இந்த வங்கியில் ஒருவர் செய்த டெபாசிட் தொகை 5 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் முழுமையாக கிடைக்கும். 5 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் தொகைக்கு கட்டாயம் எவ்விதமான காப்புறுதியும் இருக்காது. இதனால் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் ஒவ்வொரு ரூபாயும் இழப்பு தான்.

இதன் படி தி கபோல் கூட்டுறவு வங்கி லிமிடெட் வங்கியில் சுமார் 96.09 சதவீத டெபாசிட்தாரர்கள் டிஐசிஜிசி-யில் இருந்து முழு டெபாசிட் தொகையையும் பெற உரிமை பெற்றுள்ளனர்.
தி கபோல் கூட்டுறவு வங்கி லிமிடெட் வங்கியின் தற்போதைய நிதி நிலையில், இவ்வங்கியில் தற்போதுள்ள டெபாசிட்தாரர்களுக்கு முழுமையாக பணம் செலுத்த முடியாது என்ற நிலையை உறுதி செய்த பின்பு தான் ரிசர்வ் வங்கி வங்கியை மூடுவதாகவும், வங்கி உரிமத்தை ரத்து செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி



Click it and Unblock the Notifications