பெங்களூர் வங்கியின் உரிமத்தை ரத்து செய்த ஆர்பிஐ.. என்ன காரணம்..?

மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் உள்ள இரண்டு கூட்டுறவு வங்கிகளின் வங்கி உரிமத்தை ரத்து செய்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை தெரிவித்துள்ளது. ஆர்பிஐ கடந்த சில வருடங்களாக நாட்டில் இருக்கும் அனைத்து வங்கிகளும் வங்கி விதிமுறைகளை கடைப்பிடிக்கிறதா..? உரிய நேரத்தில் முக்கிய கடன் விபரங்களை சமர்ப்பிக்கிறதா..? என பல காரணிகளில் ஆய்வு செய்து வருகிறது.

இந்தியாவில் வங்கிகளின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் வேளையில், இதை சரி செய்ய வேண்டும் என்பதற்காக அதிகப்படியான கண்காணிப்பு பணிகளை ஆர்பிஐ மேற்கொண்டது. இதனால் பல வங்கிகள் இந்த கண்காணிப்பில் மாட்டிக்கொண்டது மட்டும் அல்லாமல் பல வங்கிகளின் நிதி நிலை மோசமாக இருப்பதும் கண்டுப்படிக்கப்பட்டது.

பெங்களூர் வங்கியின் உரிமத்தை ரத்து செய்த ஆர்பிஐ.. என்ன காரணம்..?

ஆர்பிஐ பல வங்கிகளின் உரிமத்தை ஏற்கனவே ரத்து செய்துள்ள நிலையில் புதன்கிழமை அறிவிப்பு மூலம் மகாராஷ்டிர மாநிலத்தின் புல்தானா பகுதியை சேர்ந்த மல்காபூர் நகர்ப்புற கூட்டுறவு வங்கி லிமிடெட், மற்றும் கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் இயங்கி வந்த சுஷ்ருதி சௌஹர்தா சககார வங்கி நியாமிதா ஆகிய இரு கூட்டுறவு வங்கிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த இரண்டு கூட்டுறவு வங்கிகளும் புதன்கிழமை வர்த்தக நேரம் முடிவடைந்ததிலிருந்து வங்கி நிர்வாகம் எவ்விதமான வணிகத்தை மேற்கொள்ள கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனை மகாராஷ்டிரா மற்றும் பெங்களூர் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி இரண்டு தனித்தனி அறிக்கைகளில் தெரிவித்துள்ளது.

மல்காபூர் நகர்ப்புற கூட்டுறவு வங்கி, சுஷ்ருதி சௌஹர்தா சககார வங்கி நியாமிதா ஆகிய இரு வங்கிகளிடமும் போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லை என்பதால் வங்கி உரிமத்தை ரத்து செய்யும் முடிவுக்கு ரிசர்வ் வங்கி வந்துள்ளது. இதோடு தற்போதைய நிதி நிலையில், இவ்வங்கிகளில் உள்ள டெபாசிட்தாரர்களுக்கு முழுமையாக பணத்தை செலுத்த முடியாது என்றும் ஆர்பிஐ கூறியது.

ஆர்பிஐ உத்தரவின் படி மல்காபூர் நகர்ப்புற கூட்டுறவு வங்கி, சுஷ்ருதி சௌஹர்தா சககார வங்கி நியாமிதா ஆகிய இரு வங்கிகளை மூடப்படம் வேளையில் ஒவ்வொரு டெபாசிட் வாடிக்கையாளரும், DICGC இன்சூரன்ஸ் பாதுகாப்பு கீழ் 5 லட்சம் ரூபாய் வரையிலான தொகையை பெற முடியும், 5 லட்சத்திற்கு மேல் பணத்தை வைத்திருப்பவர்களுக்கு நிதி இழப்பு ஏற்படும்.

ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பின் படி மல்காபூர் நகர்ப்புற கூட்டுறவு வங்கியின் 97.60 டெபாசிட்தாரர்களுக்கு முழு தொகையும் கொடுக்கப்பட்டது. இதற்காக 496.98 கோடி ரூபாய் DICGC கீழ் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல் பெங்களூர்-ஐ சேர்ந்த சுஷ்ருதி சௌஹர்தா சககார வங்கி நியாமிதா வங்கி 91.92 டெபாசிட்தாரர்களுக்கு முழு தொகையும் கொடுக்கப்பட்டது. இதற்காக 54.16 கோடி ரூபாய் DICGC கீழ் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+